தேர்தல் செலவீனம் ஒழுங்குப்படுத்தல் சட்டமூலம் உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கு செல்வாக்கு செலுத்தாது என்ற திருத்தத்தை ஏற்க முடியாது - நீதியமைச்சர்

Published By: Vishnu

19 Jan, 2023 | 09:44 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

தேர்தல் செலவீனம் ஒழுங்குப்படுத்தல் சட்டமூலம் இடம்பெறவுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கு செல்வாக்கு செலுத்தாது என்ற திருத்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என நீதியமைச்சர் விஜயதாஷ ராஜபக்ஷ தெரிவித்தார்.

அரசாங்கத்தின் உண்மை முகம் வெளிப்பட்டு விட்டது.தேர்தலை பிற்போடும் முயற்சி பகிரங்கமானது. அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கு எதிராக உயர்நீதிமன்றம் செல்வோம் என எதிர்க்கட்சிகளின் பிரதம கோலாசான் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (19) வியாழக்கிழமை இடம்பெற்ற தேர்தல் செலவீனம் ஒழுங்குப்படுத்தல் சட்டமூலத்தின் திருத்தங்கள் குழுநிலையில் வாசிப்பு அளிக்கப்பட்ட போது மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டது.

தேர்தல் செலவீனம் ஒழுங்குப்படுத்தல் சட்டமூலத்தின் ஒருசில உறுப்புரைகளுக்கு கொள்கை அடிப்படையில் இணக்கம் தெரிவித்துள்ளோம்.

இருப்பினும் உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கு உத்தியோகப்பூர்வ அறிவிப்பு விடுவிக்கப்பட்டு,வேட்பு மனுத்தாக்கல் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில் இந்த சட்டமூலத்தை கொண்டு வந்து தேர்தல் நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்த அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

நீதி ஆலோசனை குழுவிற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அழைக்கப்பட்டிருந்த போது,தேர்தல் செலவீனம் ஒழுங்குப்படுத்தல் சட்டமூலத்தை நிறைவேற்றினால் அது உள்ளுராட்சிமன்றத் தேர்தல் நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என அவரிடம் வினவினோம்.

உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் தொடர்பில் புதிய சட்டம் இயற்றப்பட்டால் அது உள்ளுராட்சிமன்றத் தேர்தல் நடவடிக்கைகளுக்கு தாக்கம் செலுத்தும் என ஆணைக்குழுவின் தலைவர் நேரடியாக குறிப்பிட்டார்.இதன் காரணமாகவே இந்த சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இவ்விடயம் தொடர்பில் மீண்டும் கருத்துரைப்பது பயனற்றது.தேர்தலுக்கு கறுப்பு பணம் செலவு செய்யப்படுவதை நன்கு அறிவோம்,பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களை காணும் போது அத உறுதிப்படுத்தப்படுகிறது.ஆகவே தேர்தல் செலவீனம் ஒழுங்குப்படுத்தல் தொடர்பில் சட்டம் இயற்றப்படுவதை ஏற்றுக்கொள்கிறோம்.

சட்ட சிக்கலை ஏற்படுத்தி உள்ளுராட்சிமன்றத் தேர்தலை பிற்போடும் முயற்சியே தேர்தல் செலவினம் ஒழுங்குப்படுத்தல் சட்டத்தின் உள்நோக்கமாக உள்ளது. இது முற்றிலும் தவறானது, நீதியமைச்சரே இதனை ஏற்றுக்கொள்ளுங்கள். உள்ளுராட்சிமன்றத் தேர்தல் நடவடிக்கைகளுக்கு தேர்தல் செலவீனம் ஒழுங்குப்படுத்தல் சட்டம் செல்வாக்கு செலுத்தாது என்ற இடைக்கால விதிவிதான திருத்தத்தை உள்ளடக்குங்கள்.இது நியாயமான கோரிக்கை.

உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கல் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற, தேர்தல் நடத்தும் திகதி நாளை அறிவிக்க உள்ள நிலையில் தேர்தல் சட்டத்தை மாற்றியமைக்க அரசாங்கம் அவதானம் செலுத்துகிறன்றமை நியாயமற்றது.எமது திருத்தங்களை  ஏற்றுக் கொள்ளாவிட்டால் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிப்போம் என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தேர்தல் செலவீனம் ஒழுங்குப்படுத்தல் சட்டமூலம் இயற்றப்பட்டவுடன் தேர்தல் தொடர்பான சகல அதிகாரங்களும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பொறுப்பாக்கப்படும்.இந்த சட்டமூலம் உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கு செல்வாக்கு செலுத்துமா என தேர்தல்கள் ஆணைக்குழுவில் வினவினோம், இடம்பெறவுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கு இந்த சட்டம் செல்வாக்கு செலுத்தாது என ஆணைக்குழு அறிவித்தது.முரண்பாடு ஏற்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிடவில்லை.

இதன்போது மீண்டும் எழுந்து உரையாற்றிய லக்ஷ்மன் கிரியெல்ல இந்த சட்டத்தை நிறைவேற்றினால் தேர்தலுக்கு பாதிப்பு ஏற்படும் என ஆணையாளர் தெளிவாக குறிப்பிட்டார்.அதுவே அரசாங்கத்திற்கு வேண்டும் என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இந்த சட்ட மூலத்தை நிறைவேற்றினால் தேர்தலுக்கு பாதிப்பு ஏற்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெளிவாக குறிப்பிட்டார்.அதன் காரணமாகவே நாங்கள் திருத்தங்களை முன்வைத்தோம். திருத்தம் செய்தால் அனைத்து பிரச்சினைகளும் தீர்வடையும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 20:53:02
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10