நவீன மற்றும் சமகால கலைக்கான இலங்கை அருங்காட்சியகத்தின் (MMCA இலங்கை) 'சந்திப்புகள்' கண்காட்சியில் பல்வேறு விடயங்களை பார்வையிடலாம்.
இக்கண்காட்சியின் காட்சி 1 சர்வதேச அரங்கில் இலங்கையின் ராஜதந்திர மற்றும் பூகோள அரசியலின் தொடக்கத்தின் வரலாற்றை காட்சிப்படுத்துகிறது.
இலங்கையின் மைல்கற்களை 1960களிலிருந்து பெறப்பட்ட கலைப் படைப்புகளைக் கொண்டு ஆவணப்படுத்துகிறது.
1955இல் இடம்பெற்ற பண்டுங் கருத்தரங்கம் என்றழைக்கப்படும் முதலாவது ஆசிய ஆபிரிக்க கருத்தரங்கமானது, உலக மக்கள் தொகையில் 54% மக்கள் பிரதிநிதிகளை ஒன்றுகூட வழிவகுத்தது.
மேலும், சோவியத் ஒன்றியத்தின் ஆதரவாளர்கள் மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் ஆதரவாளர்களுக்கு மத்தியில் பனிப்போர் நடந்த 1961ஆம் ஆண்டு காலப்பகுதியில் உருவாக்கப்பட்ட அணிசேரா இயக்கத்தின் (NAM) தொடக்கத்துக்கு வித்திட்டது.
இந்த NAM அமைப்பில் இலங்கையும் ஒன்றிணைந்து சுதந்திரத்துக்குப் பின்னரான பொருளாதார மற்றும் அரசியல் சிக்கல்களை அங்கீகரிக்கும் பல நாடுகளில் ஒன்றானது.
'ஆப்ரே கொலெட்டின்' (1920–1992) பண்டுங் கருத்தரங்கில் (The Bandung Conference - 1955) கலந்துகொண்டவர்களின் கேலிச்சித்திர படைப்பாகும்.
இது NAMஇல் கலந்துகொண்ட முக்கிய பிரதிநிதிகளில் இலங்கை பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவல (1897–1980), எகிப்திய பிரதமர் கமால் அப்டெல் நசர் (1918–1970) மற்றும் இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேருவை (1889–1964) காட்சிப்படுத்துகின்றது.
இதன்போது வருகை தந்திருந்த 29 அரசியல் பிரதிநிதிகளில் சீன நாட்டின் பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜூ என்லாயையும் (1898–1976) ஆப்ரே கொலெட் காட்சிப்படுத்தியுள்ளார்.
சீனப் பிரதமர் கடைசியில் நிற்பதாக காட்சிப்படுத்துவதனூடாக காலனிய நீக்கம், சுய ஆட்சி மற்றும் வன்முறைக்கு எதிரான இலட்சியங்களின் பகுதியான பொருளாதார அபிவிருத்தியையொட்டிய கலந்துரையாடல்களில் சீனாவின் வளர்ந்துவரும் தாக்கம் என்பன குறிக்கப்படுகிறது.
மேலும், இலங்கை பிரதமரான சிறிமாவோ பண்டாரநாயக்கவின் (1916–2000) தலைமையில் இலங்கை, அணிசேரா இயக்கத்தின் ஐந்தாவது உச்சிமாநாட்டை 86 நாடுகளின் பங்களிப்போடு 1976ஆம் ஆண்டு ஒகஸ்ட் 16 முதல் 19 வரை நடாத்தியது.
இலங்கையின் இத்தகைய பெருமையை வெளிக்காட்ட NAM கூட்டத்தின் நோக்கத்தையொட்டிய கலைப்படைப்புகள், இலக்கிய படைப்புகள் மற்றும் பல்வேறு ஊடகங்களினூடாக பண்டாரநாயக்க மிக சாதூர்யமாக செயற்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியின் முக்கிய கலைப்படைப்பாக செனக சேனநாயக்கவின் கலைப்படைப்பு காட்சிப்படுத்தப்பட்டது.
ஹோட்டல் லங்கா ஒபிரோயில் (சினமன் கிராண்ட்) வருகை தந்திருந்த பிரமுகர்கள் பார்க்கும் வண்ணம் இப்பிரம்மாண்டமான கலைப்படைப்பு காட்சிப்படுத்தப்பட்டது.
இந்த ஓவியத்தில் அற்புதமான நிலப்பரப்பில் பச்சை, கபிலன், நீளம், சாம்பல், வெளிர் வெள்ளை நிறம் போன்ற பல்வேறு வண்ணங்களை கொண்ட மிருகங்கள் உலா வருவதை காணலாம்.
மிருகங்களின் தனித்துவமான முக இலட்சணங்கள் இன்மை உயிரினங்களுக்கு மத்தியில் உள்ள ஒருமைப்பாட்டை காண்பிக்கிறது.
அதேபோன்று, அவற்றின் உடல்கள் வட்ட வடிவில் தட்டையான நிறங்களை கொண்டிருப்பதால் விலங்குகளுக்கு மத்தியிலான வேறுபாட்டை விட ஒற்றுமையை வெளிக்கொண்டு வருகிறது.
இந்த ஓவியத்தினூடாக தேசமும் அதன் இயற்கை வளங்களின் சமநிலையை காட்சிப்படுத்தும் அதேவேளை அணிசேரா இயக்கத்தின் நோக்கம் மற்றும் அதன் நன்மைகளை கோடிட்டுக் காட்டுகிறது.
மேலும், இத்தினத்தை நினைவுகூரும் விதமாக ஐந்து மற்றும் இரண்டு ரூபாய் நாணயங்களை பண்டாரநாயக்க அரசாங்கம் வெளியிட்டது. இந்நாணயங்கள் மறைந்த பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் ஞாபகார்த்தமாக கட்டப்பட்ட பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தை காட்சிப்படுத்துகின்றது.
1970 - 1973 காலப்பகுதியில் கட்டப்பட்ட BMICH சீனக் குடியரசால் இலங்கைக்கு பரிசாக வழங்கப்பட்டது.
1968ஆம் ஆண்டு பிரதமர் பண்டாரநாயக்க அணிசேரா இயக்கத்தின் 5ஆவது உச்சி மாநாட்டை நடத்துவதற்கு அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய கருத்தரங்கு மண்டபம் ஒன்றை கோரிக்கையாக கேட்டதன்படி, சீன அரசாங்கம் வழங்கிய பரிசாகும்.
இந்நாணயங்கள் மாநாட்டை மட்டுமன்றி, இலங்கை - சீன உறவின் தொடக்கத்தையும் காட்சிப்படுத்துகிறது.
1972ஆம் ஆண்டு இலங்கை குடியரசானதையொட்டி 'தேசிய சின்னம் மற்றும் கொடி வடிவமைப்பு குழு' தேசிய சின்னத்தை வடிவமைத்தது.
இச்சின்னமானது பௌத்த கலாசாரத்தின் தூய்மை மற்றும் பிணைப்பற்ற நிலையை குறிக்கும் வண்ணமாக நீலோற்பல மலரின் இதழ்களை கொண்டுள்ளது.
தாமரை குறியீடு 'சந்திப்புகள்' கண்காட்சியின் காட்சி 1இல் உள்ள இரு வேறு கால பதிப்புகளில் காணக்கூடியதாக உள்ளது.
1968ஆம் ஆண்டு ஆபிரிக்க ஆசிய எழுத்தாளர்கள் குழு 'The Call' எனும் சஞ்சிகை மற்றும் மும்மொழிகளிலும் வெளியிடப்பட்ட 'Afro-Asian Writings' காலாண்டு சஞ்சிகை ஆகியவற்றை வெளியிட்டது.
1970களில் 'Afro-Asian Writings', ‘Lotus: Afro-Asian Writings’ (தாமரை: ஆபிரிக்க-ஆசிய எழுத்து) என பெயர்மாற்றம் செய்யப்பட்டது. இப்பதிப்பானது பனிப்போர் காலத்தின் 'மூன்றாம் உலக' இலக்கியப் படைப்புகளின் மிக முக்கிய படைப்புகளை கொண்டிருப்பதாக கருதப்படுகிறது.
இப்பல்வேறு 'சந்திப்புகள்' ஊடாக இலங்கையின் இராஜதந்திர உறவானது எவ்வாறு வளர்ச்சி பெற்றன என்பதை காணக்கூடியதாக உள்ளது.
1960 மற்றும் 70களில் இலங்கை வந்த பாதை என்ன என்பதை இக்கண்காட்சி மிக அருமையாக காட்சிப்படுத்துகின்றது. 50 வருட சந்திப்புகள் மற்றும் தலைமைத்துவங்கள் எவ்வாறு இலங்கை வரலாற்றை தாக்கியது என்பதை எடுத்துக்காட்டுகிறது.
மேலதிக தகவல்களுக்கு, www.mmca-srilanka.org இணையதளம் அல்லது www.facebook.com/mmcasrilanka முகநூல் அல்லது https://www.instagram.com/mmcasrilanka/ இன்ஸ்டாகிராம் பக்கங்களின் மூலம் இலங்கை MMCAவை பின்தொடரவும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM