தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்மை வன்மையாக கண்டிக்கத்தக்கது - தினேஷ்

Published By: Vishnu

19 Jan, 2023 | 04:17 PM
image

(எம்,ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் இரு உறுப்பினர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை வன்மையான கண்டிக்கத்தக்கது.

தேர்தல் நடவடிக்கையின் போது அனைத்து தரப்பினரது பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு.

தேர்தலுக்கான நிதி ஒதுக்கீட்டில் சிக்கல் உள்ளது என திறைச்சேரி அறிவித்துள்ளது. அனைத்து காரணிகள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (19) இடம்பெற்ற தேர்தல் செலவினத்தை ஒழுங்குப்படுத்தல் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்தல் அல்லது கண்காணிக்கும் வகையில் புதிய சட்டத்தை உருவாக்குமாறு தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்புக்கள்,அரசியல் கட்சிகள் உட்பட தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தல் முறைமை தொடர்பிலான பாராளுமன்ற தெரிவு குழுவிற்கு அறிவுறுத்தியது.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய தேர்தல் செலவினத்தை ஒழுங்குப்படுத்தல் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலத்தை ஒரு தரப்பினர் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தினார்கள்.

தேர்தல் செலவீனத்தை ஒழுங்குப்படுத்தல் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணல்ல என்று உயர்நீதிமன்றம் வியாக்கியானதம் வழங்கியுள்ளது.

அத்துடன் ஒருசில திருத்தங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும், நினைத்தவற்றை சட்டமூலத்திற்குள் உள்வாங்க முடியாது என உயர்நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது,உயர்நீதிமன்றத்தின் கௌரமாக ஏற்றுக்கொள்கிறோம்.

சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தலை நடத்துவதற்கு வரையறையில்லாத வகையில் தேர்தலுக்கு செலவு செய்ய முடியும் என்ற நிலைமை மாற்றியமைக்கப்பட வேண்டும். உள்ளுராட்சிமன்றத் தேர்தல் உரிய காலத்தில் நடத்த வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது.

மாகாண சபை தேர்தலை நடத்த முடியாத நிலை காணப்படுகிறது.தேர்தல் முறைமையில் திருத்தம் செய்தால் அது மாகாண சபை தேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்படும் என ஆரம்பத்தில் இருந்து குறிப்பிட்டோம்.

மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டுமாயின் மாகாண சபை தேர்தல் தொடர்பான சட்ட சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும் அல்லது புதிய சட்டத்தை உருவாக்க வேண்டும்.

தேர்தலை நடத்தும் சூழல் தற்போது உள்ளதா என்பது குறித்து அரசாங்கம் என்ற ரீதியில் அவதானம் செலுத்த வேண்டும்.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் இருவருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது,இது முற்றிலும் வெறுக்கத்தக்க செயற்பாடாகும். 

தேரதல் காலத்தில் அனைத்து தரப்பினரது பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும். ஆகவே தற்போதைய நெருக்கடியான நிலையில் தேர்தலுக்கு நிதி ஒதுக்குவது சிக்கலானது என திறைச்சேரி அரசாங்கத்திடம் அறிவுறுத்தியுள்ளது.

அனைத்து காரணிகளையும் கருத்திற் கொண்டு அரசாங்கம் செயற்பட வேண்டும்.நாட்டின் நிதி நிலைமை தொடர்பில் எதிர்தரப்பினர் நன்கு அறிவார்கள்.தேர்தல் விடயத்தில் எதிர்க்கட்சிகள் இரட்டை நிலைப்பாட்டை மேற்கொள்கிறார்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சட்ட விரோதமாக மணல் ஏற்றிச்சென்ற டிப்பர்...

2025-03-20 14:08:55
news-image

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் திகதி...

2025-03-20 13:49:47
news-image

சிறிய சிவனொளிபாதமலையிலிருந்து கீழே தவறி விழுந்து...

2025-03-20 13:27:55
news-image

காசாவுக்கான மின்சார விநியோகத்தை துண்டித்தது இஸ்ரேல்...

2025-03-20 13:55:42
news-image

“ரன் மல்லி”யின் நண்பன் ஹெரோயினுடன் கைது

2025-03-20 13:11:36
news-image

உள்ளூராட்சி அதிகார சபைத் தேர்தல் ;...

2025-03-20 13:19:18
news-image

ஏப்ரல் மாதம் முதல் பால் தேநீரின்...

2025-03-20 12:40:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-03-20 12:23:33
news-image

தேசபந்து தென்னக்கோனின் வீடு ஒரு வடிசாரய...

2025-03-20 12:06:24
news-image

கணேமுல்ல பகுதியில் சட்டவிராத மதுபானத்துடன் ஒருவர்...

2025-03-20 12:03:15
news-image

வாய்ப் புற்றுநோயை ஏற்படுத்தும் புகையிலை பாவனை

2025-03-20 12:10:51
news-image

யாழில் காணாமல்போன மீனவர்கள் இராமநாமபுரம் கடலில்...

2025-03-20 11:35:39