சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸ் நகரில் உள்ள பொலிஸ் நிலையமொன்றில் கடந்த 16 ஆம் திகதி சிறுமி ஒருவரால் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இத் தாக்குதலில் மூன்று பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்திருந்தனர். இந்நிலையில் குறித்த தற்கொலைத் தாக்குதலுக்கு தனது குழந்தைகளை தாய் முத்தமிட்டு அனுப்பும் காணொளி காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளன.

கொலை செய்வதற்காக முத்தமிட்டு அனுப்பப்பட்ட குழந்தை - 7 வயது சிரிய குழந்தையின் கடைசி நிமிடங்கள

சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸ் நகரிலுள்ள பொலிஸ் நிலையத்தில் கடந்த டிசம்பர் 16 ஆம் திகதி ஜிகாதி என்ற 7 வயது சிறுமி தற்கொலை தாக்குதல் ஒன்றை நடத்தியிருந்தார்.

குறித்த சிறுமி தான் ஒரு தற்கொலை தாங்கியாக மாறுவதற்கு முதல் தனது 9 வயது சகோதரியுடன் இணைந்து அன்பு பரிமாற்றங்களை செய்யும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. 

அதில் குறித்த சிறுமியின் தாய் தனது இரு குழந்தைகளையும் முத்தமிட்டு அரவனைத்து வழியனுப்பி வைக்கிறார்.

சிறுமிகள் இருவருக்கும் இஸ்லாமி உடையை அணிவித்து அவர்களின் உடைகளுக்குள் தற்கொலை குண்டை பொருத்திய தாக்குதல் சூத்திரதாரி அவர்களுக்கு தற் கொலை தாக்குதல் பற்றிய விளக்கங்களை கொடுக்கவே இறுதியில் அல்லாஹ்வு அக்பர் என சத்தமிட்டவாறு சிறுமிகள் குறித்த கட்டிடத்தை விட்டு வெளியில் வருகின்றனர்.

இது பற்றி பொலிஸ் தரப்பு விளக்கும் போது, குறித்த சிறுமி தனிமையாக பொலிஸ் நிலையத்திற்குள் வந்து தான் ஓய்வரைக்கு போக வேண்டும் எனக்கூறிய நிலையில் தன்னை வெடிக்க செய்துள்ளார். 

அத்தாக்குதலில் பொலிஸ் நிலையத்திலிருந்த மூன்று பொலிஸ் அதிகாரிகள் காயமுற்றதோடு குறித்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

அத்தோடு குறித்த சிறுமியின் தந்தை பற்றி அறிய வருவதாவது, அவர் அல்கைதா தீவிரவாத அமைப்புடன் தொடர்பான அல் நூஸ்ரா அமைப்புடன் இருந்தவர் என் தெரியவந்துள்ளது. 

இத்தாக்குதல் யாரால் வழி நடத்தப்பட்டது என்பது பற்றிய தரவுகளை ஆராய்ந்து வருவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சிரிய தீவிரவாத தாக்குதல் சம்பவங்களால் இதுவரையும் சுமார் 310,000 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.