மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் ஆரம்பமே தேர்தல் செலவுகள் ஒழுங்குப்படுத்தல் சட்டமூலம் - நீதி அமைச்சர்

Published By: Vishnu

19 Jan, 2023 | 04:07 PM
image

(எம்,ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்தும் வகையில் தேர்தல் செலவுகளை ஒழுங்குப்படுத்தல் சட்டமூலம் கொண்டு வரப்படவில்லை.

மோசடிகளை தோற்றுவிக்கும் தேர்தல் முறைமையை இல்லாதொழிக்காவிட்டால் நாட்டு மக்கள் முழு அரசியல் கட்டமைப்பையும் முழுமையாக புறக்கணிப்பார்கள்.

மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் ஆரம்பமாகவே தேர்தல் செலவுகள் ஒழுங்குப்படுத்தல் சட்டமூலம் காணப்படுகிறது என நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (19) இடம்பெற்ற தேர்தல் செலவினத்தை ஒழுங்குப்படுத்தல் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

உள்ளுராட்சிமன்றத் தேர்தலை பிற்போடும் வகையில் தேர்தல் செலவினத்தை ஒழுங்குப்படுத்தல் சட்டமூலம் கொண்டு வரப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகிறது.

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் ஊடாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 தேர்தல் செலவினத்தை ஒழுங்குப்படுத்தல் சட்டமூலம் தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தோம்.

தேர்தல் செலவினத்தை கட்டப்படுத்தும் வரைபினை தயார்படுத்த குறைந்தது இருமாத காலமேனும் தேவை என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நடைமுறையில் உள்ள தேர்தல் சட்டத்திற்கு அமைய தேர்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டது.

தேர்தல் தொடர்பில் ஆணைக்குழு உரிய தீர்மானம் எடுக்க வேண்டும்.ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு தலையிட முடியாது .

இதன்போது எழுந்து உரையாற்றிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, தேர்தல் செலவினத்தை ஒழுங்குப்படுத்தல் சட்டம் சிறந்தது என்பதை ஏற்றுக்கொள்கிறோம்,ஆனால் உள்ளுராட்சிமன்றத் தேர்தலை பிற்போட இந்த சட்டமூலம் ஒரு கருவியாக பயன்படுத்திக் கொள்ளப்படுகிறதா என்ற சந்தேகம் காணப்படுகிறது.

தேர்தல் செலவினத்தை ஒழுங்குப்படுத்தல் சட்டமூலம் உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கு தாக்கம் செலுத்தாது என அரசாங்கம் குறிப்பிடுவதை நம்ப முடியவில்லை,ஏனெனில் இந்த சட்டமூலம் தொடர்பில் நீதி அமைச்சர் பாராளுமன்ற அலுவல்கள் குழு கூட்டம், ஆலோசனை கூட்டத்தில் ஒன்றை குறிப்பிடுகிறார், சபையில் பிறிதொன்றை குறிப்பிடுகிறார்.

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் நடவடிக்கைகளுக்கு தேர்தல் செலவினத்தை ஒழுங்குப்படுத்தும் சட்டம் பாதிப்பை ஏற்படுததாது என்ற இடைக்கால விதிவிதானத்தை திருத்தமாக கொண்டு வர வேண்டும் என்றார்.

இதன்போது மீண்டும் எழுந்து உரையாற்றிய நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷஜனாதிபதி தலைமையில் நேற்று முன்தினம் கட்சி தலைவர் கூட்டத்தில் தேர்தல் செலவினத்தை ஒழுங்குப்படுத்தல் சட்டமூலத்தை வியாழக்கிழமை (19) விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டது.இந்த சட்டத்திற்கு அமைய தேர்தல் தொடர்பான வரைபினை தேசிய தேர்தல்கள் வகுக்க வேண்டும்.

இலங்கையில் முறையற்ற தேர்தல் முறைமை அமுலில் உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.முறையற்ற தேர்தல் முறைமை முறையற்ற அரச நிர்வாகத்தை தோற்றுவிக்கும்.முன்னாள் பிரதமர் பண்டாரநாயக்கவின் படுகொலைக்கும் முறையற்ற தேர்தல் முறையை ஒரு காரணியாக அமைந்தது.

ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்தும் வகையில் தேர்தல் செலவினத்தை ஒழுங்குப்படுத்தும் சட்டமூலம் கொண்டு வரப்படவில்லை.

நாட்டு மக்களுக்கு அரசியல்வாதிகள் மீதான நம்பிக்கை முழுமையாக சிதைவடைந்துள்ளது.சிறந்த அரசியல் கட்டமைப்பை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

தேர்தல் செலவினம் தொடர்பில் கட்டுப்பாடுகள் விதித்தால் தான் முறையான அரச நிர்வாக கட்டமைப்பை தோற்றுவிக்க முடியும்.தேர்தல் செலவினத்தை ஒழுங்குப்படுத்தல் சட்டமூலம் தொடர்பில் திருத்தங்களை மேற்கொள்ள தயார்.மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற சகல தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கண்டியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில்...

2025-03-15 12:28:06
news-image

புதுக்குடியிருப்பில் விபத்து ; இளைஞன் உயிரிழப்பு

2025-03-15 12:08:29
news-image

முதியவரை காப்பாற்றச் சென்ற தந்தை பொல்லால்,...

2025-03-15 11:54:12
news-image

மட்டு. சந்திவெளி காட்டு பகுதியில் ஆண்...

2025-03-15 11:35:24
news-image

மதுபோதையில் நான்கு நண்பர்களுக்கிடையில் தகராறு ;...

2025-03-15 11:12:51
news-image

முல்லைத்தீவில் ஆயிரக்கணக்கான துப்பாக்கி ரவைகள் மீட்பு...

2025-03-15 10:37:52
news-image

சம்மாந்துறையில் தேக்கு மரப்பலகைகளை வாகனத்தில் கடத்திய...

2025-03-15 10:18:32
news-image

கிராண்ட்பாஸில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இரு...

2025-03-15 09:57:39
news-image

5 வருடங்களாக தேடப்பட்டு வந்த சந்தேக...

2025-03-15 09:43:37
news-image

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம்

2025-03-15 09:34:00
news-image

பட்டலந்த அறிக்கை குறித்து அரசாங்கம் நடவடிக்கை...

2025-03-14 17:24:29
news-image

இன்றைய வானிலை 

2025-03-15 06:23:42