போலியான பிரசாரம் தொடர்பில் சீனா அதிருப்தி

By Presath

21 Dec, 2016 | 05:07 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

காணி சுவீகரிப்பு என கூறி சீனாவிற்கு எதிராக முன்னெடுக்கப்படும் போலியான பிரசாரங்கள் குறித்து சீனா அதிருப்தியை வெளியிட்டுள்ளது. ஹம்பந்தோட்டை சிறப்பு வர்த்தக வலயத்திற்கு காணிகளை சுவீகரிப்பதாக கூறி பொது மக்கள் மத்தியில் அமைதியின்மை ஏற்படுத்தும் வகையில் செயற்படுபவர்கள் தொடர்பில் மூன்று சீன நிறுவனங்கள் அந்நாட்டு அரசாங்கத்திற்கு அறிக்கை சமர்பித்து முறைப்பாடு செய்துள்ள நிலையிலேயே இவ்வாறு அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 6 வருடக்காலமாக இலங்கையில் செயற்படும் குறித்த நிறுவனங்களினால் செய்யப்பட்ட முறைப்பாட்டு அறிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் சீன அரசாங்கம் அனுப்பி வைத்துள்ளது.

இதன் பின்னர் குறித்த திட்டங்களுக்கான காணி விவகாரம் குறித்து அரசியல் மட்டத்தில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் மக்கள் மத்தியிலும் எதிர்ப்புகள் எழுந்தன. இதனடிப்படையில் சீன - இலங்கை சிறப்பு வர்த்தக வலய திட்டத்திற்கு தற்போது  காணப்படும் தடைகள் மற்றும் போலியான பிரசாரங்கள் குறித்து சீன நிறுவனங்கள் அவர்களது அரசாங்கத்திற்கு அறிவித்துள்ள நிலையில் சீன அரசு அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right