தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, 'நாய் சேகர்' படத்தின் மூலம் கதாநாயகனாக உயர்ந்து, தொடர்ந்து கதாநாயகனாகவே நடித்துவரும் சதீஷ் நடிப்பில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
அறிமுக இயக்குநர் வெங்கி இயக்கத்தில் உருவாகும் இந்த பெயரிடப்படாத படத்தில் சதீஷுக்கு ஜோடியாக புதுமுக நடிகை சிம்ரன் குப்தா நடிக்கிறார்.
இவர்களுடன் ஆனந்தராஜ், ஜோன் விஜய், ரமேஷ் திலக், 'பழைய ஜோக்' தங்கதுரை, மதுசூதனன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
யுவா ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இந்த படத்துக்கு வி.பி.ஆர் இசையமைக்கிறார். த்ரில்லர் ஜேனரில் தயாராகும் இந்த திரைப்படத்தை ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் கே. விஜய் பாண்டி தயாரிக்கிறார்.
பெப்ரவரியில் படப்பிடிப்பு பணிகள் தொடங்கவிருக்கும் இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது.
இதன்போது முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர்கள் ஆர். ரவீந்திரன், லலித் குமார், மதன் உள்ளிட்ட பலர் பங்குபற்றி படக்குழுவினரை வாழ்த்தினர்.
இதனிடையே சந்தானம், சூரி, யோகி பாபு ஆகியோரை தொடர்ந்து நகைச்சுவை நடிகரான சதீஷ், கதாநாயகனாக மட்டுமே நடிப்பதால் தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக திரையுலக வணிகர்கள் தெரிவித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM