பெண்களுக்கு கிடைக்க வேண்டிய கல்வி உரிமை, அதிகாரம் மற்றும் அவர்களின் கனவுகளை எட்டுவதற்கு தடையாக இருக்கும் சமூக முரண்பாடுகளுக்கு எதிராக போராடும் வலிமை ஆகியவற்றை முன்னிறுத்தி உருவாக்கப்பட்டுள்ள 'அயலி' எனும் புதிய வலைத்தள தொடரின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது. இதனை இயக்குநரான கிருத்திகா உதயநிதி வெளியிட்டார்.
முத்துக்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த வலைத்தள தொடரில் அபி நட்சத்திரா, அனு மோள், 'அருவி' மதன், லிங்கா, சிங்கம் புலி, லவ்லின், காயத்ரி தாரா, பிருகதீஸ்வரன், கௌதம், ரேஷ்மி, முத்துப்பாண்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
எட்டு அத்தியாயங்கள் கொண்ட இந்த தொடரில் லட்சுமி பிரியா, ஸ்மிருதி வெங்கட், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்கள்.
வீணை மைந்தன், சச்சின், இயக்குநர் முத்துக்குமார் ஆகியோர் திரைக்கதை, வசனம் எழுத, ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய, ரேவா இசையமைத்திருக்கிறார்.
இந்த வலைத்தளத் தொடரை எஸ்ட்ரெல்லா ஸ்டோரிஸ் எனும் பட நிறுவனம் சார்பில் குஷ்மாவதி தயாரித்திருக்கிறார். இந்த தொடர் ஜனவரி 26ஆம் திகதி முதல் ஜீ5 எனும் டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது.
இந்த தொடர் குறித்து இயக்குநர் பேசுகையில்,
"வீரப்பணை எனும் கிராமத்தில் வசிக்கும் பெண் பிள்ளைகள் பூப்பெய்தியவுடன் அவர்களுக்கு திருமணம் செய்துவிடுவார்கள். இதனை தவிர்க்கவோ புறக்கணிக்கவோ செய்தால், அவர்கள் வணங்கும் 'அயலி' எனும் பெண் தெய்வம் கடுமையாக தண்டிப்பாள் என்ற நம்பிக்கை அம்மக்களிடத்தில் திளைத்திருக்கிறது.
இந்த கிராமத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் பெண்ணொருத்தி, மருத்துவராக வேண்டும் என கனவு காண்கிறாள். அவளின் கனவு பலித்ததா? அவளின் கனவுப் பயணத்தில் ஊர்மக்கள் எத்தகைய தடையை ஏற்படுத்தினார்கள் என்பதை எட்டு அத்தியாயங்களில் சுவாரஸ்யமான திருப்பங்களுடன் உருவாக்கி இருக்கிறோம்'' என்றார்.
ஜி5 எனும் டிஜிட்டல் தளம் அண்மையில் வெளியான 'விலங்கு', 'பேப்பர் ராக்கெட்' போன்ற வலைத்தள தொடர்கள் பார்வையாளர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த வகையில் இந்த 'அயலி' வலைத்தள தொடருக்கும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM