இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவரால் வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளானதாக குற்றச்சாட்டு

Published By: Sethu

19 Jan, 2023 | 01:16 PM
image

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் மற்றும் பயிற்றுநர்களால் மல்யுத்த வீராங்கனைகள் பலர் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளானதாக குற்றம் சுமத்தி, இந்திய மல்யுத்த சம்மேளன அதிகாரிகளுக்கு எதிராக இந்திய மல்யுத்த வீர வீராங்கனைகள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரான பாஜக பாராளுமன்ற உறுப்பினர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் பலர் டெல்லியில் நேற்று (18) போராட்டத்தையும் ஆரம்பித்தனர்.

பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் என இரண்டிலும் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகட், இந்தியாவின் பிரபல மல்யுத்த வீராங்கனைகளான சாக்ஷி மாலிக், சங்கீதா போகட், மல்யுத்த வீரர்கள் பஜ்ரங், சோனம் மாலிக், அன்ஷூ ஆகியோரும் இப்போராட்டத்தில் பங்குபற்றினர்.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்

'மல்யுத்த வீராங்கனைகள் தேசிய பயிற்சி முகாம்களில் பயிற்சியாளர்களாலும், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்காலும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். தேசிய பயிற்சி முகாம்களில் நியமிக்கப்பட்ட சில பயிற்சியாளர்கள் பல ஆண்டுகளாக பெண் மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருகின்றனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்' என்று வினேஷ் போகட் குற்றம்சாட்டினார்.

'பல இளம் பெண் மல்யுத்த வீராங்கனைகள் தேசிய முகாம்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக என்னிடம் புகார் அளித்துள்ளனர். எனக்குத் தெரிந்து குறைந்தது 20 பெண்கள் தேசிய பயிற்சி முகாமில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரால் தாங்கள் எதிர்கொள்ளும் பாலியல் சுரண்டல் பற்றி என்னிடம் கூறிய குறைந்தது 10 பெண் மல்யுத்த வீரர்களை நான் அறிவேன். அவர்களின் பெயர்களை என்னால் இப்போது கூற முடியாது. ஆனால், பிரதமர், உள்துறை அமைச்சரை நாங்கள் சந்திக்க நேர்ந்தால் நிச்சயம் பெயர்களைச் சொல்வேன்' என்றார்.

ANI Photo

ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் மேலும் கூறுகையில், 'இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர்கள் அனைவரும் எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை மற்றும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பால் எங்களை சிறப்பாக நடத்தும் வரை தேசிய அல்லது சர்வதேச போட்டிகளில் பங்கேற்க மாட்டார்கள். இங்குள்ள மல்யுத்த வீரர்கள், எங்களுக்கு உதவவும், விளையாட்டிற்கு உதவவும் பிரதமர் அலுவலகம் மற்றும் உள்துறை அமைச்சர் அலுவலகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாங்கள் இந்தியாவுக்காக பதக்கங்களை வென்றால், அனைவரும் கொண்டாடுகிறார்கள். ஆனால், அதற்குப் பிறகு, குறிப்பாக கூட்டமைப்பால் நாங்கள் எவ்வாறு நடத்தப்படுகிறோம் என்பதைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. பிரதமர் அலுவலகம் மற்றும் உள்துறை அமைச்சர் அலுவலகம் எங்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதாக உறுதியளித்தால், போராட்டத்தை நிறுத்துவோம். இல்லையேல், தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்.

ANI Photo

ANI Photo

மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷன், 'இந்திய மல்யுத்த கூட்டமைப்பு யாராவது ஒரு மல்யுத்த வீராங்கனை தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறுகிறார்களா? வினேஷ் மட்டுமே கூறியிருக்கிறார். தாங்கள் தனிப்பட்ட முறையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக யாராவது முன் வந்து கூறியிருக்கிறார்களா?' என்று கேள்வி எழுப்பினார்.

இந்திய மல்யுத்த சம்மேளனத்துடன் இது போன்ற பிரச்னைகள் இருந்தால், 10 ஆண்டுகளாக ஏன் யாருமே எழவில்லை... விதிமுறைகள் வகுக்கப்படும்போதெல்லாம் இது போன்ற பிரச்சினைகள் வரும்' எனக் கூறியுள்ளார்.

ANI Photo

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழைய முறைமைப்படி 16 ஆவது ஐபிஎல்...

2023-03-29 15:18:16
news-image

பெரு தேசிய கால்பந்தாட்ட அணியின் தலைவர்...

2023-03-29 14:27:18
news-image

DSI சுப்பர்ஸ்போர்ட் பாடசாலைகள் கரப்பந்தாட்டம் -...

2023-03-29 15:20:22
news-image

DanceSport ஸ்ரீலங்கா நிறுவனத்தின் இலக்கு பாரிஸ்...

2023-03-29 12:46:08
news-image

சர்வதேச போட்டிகளில் 100 ஆவது கோல்...

2023-03-29 11:35:41
news-image

197 சர்வதேச போட்டிகளில் விளையாடி சாதனை...

2023-03-28 17:28:16
news-image

வட மாகாண பட்மின்டன் போட்டியில் 3...

2023-03-28 16:27:06
news-image

லங்கா பிறீமியர் லீக் : 4ஆவது...

2023-03-28 13:46:19
news-image

இலங்கையின் உலகக் கிண்ண நேரடி வாய்ப்பு...

2023-03-28 14:15:00
news-image

U20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான குலுக்கல்...

2023-03-27 15:30:02
news-image

மகளிர் பிறீமியர் லீக் சம்பியன் பட்டத்தை...

2023-03-27 10:49:03
news-image

அருட்சகோதரர் லூக் கேடயத்தை மீண்டும் சுவீகரித்தது...

2023-03-27 09:32:11