மெசென்டெரிக் லிம்ப்பேனிடிஸ் எனப்படும் நிணநீர் அழற்சி பாதிப்பிற்குரிய சிகிச்சை

Published By: Ponmalar

19 Jan, 2023 | 12:21 PM
image

புதிதாய் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளில் பத்தாயிரத்தில் ஒருவருக்கு அவர்களுடைய குடல் பகுதியில் அமைந்திருக்கும் நிணநீர் முடிச்சுகள் மற்றும் நிணநீர் கணுக்களில் வீக்கம் ஏற்பட்டு, நிணநீர் அழற்சி எனும் பாதிப்பு உண்டாகிறது.

இதனை உரிய தருணத்தில் பரிசோதனைகள் மூலம் கண்டறிந்து சிகிச்சை பெற்றால் முழுமையான அளவில் நிவாரணம் பெறலாம்.

சில குழந்தைகள் திடீரென்று வயிற்று வலியால் அழ ஆரம்பித்துவிடுவர். சிலருக்கு வயிற்று வலியுடன் காய்ச்சலும் ஏற்படும்.

வேறு சில பிள்ளைகளுக்கு காய்ச்சலுடன் வயிற்றுப்போக்கு மற்றும் குமட்டலும், வாந்தியும் உண்டாகும். இத்தகைய அறிகுறிகள் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை சந்தித்து வயிற்றில் உள்ள மெசென்டெரிக் எனப்படும் நிணநீர் பகுதிகளில் ஏதேனும் வீக்கம் ஏற்பட்டிருக்கிறதா? என்பது குறித்து ஆராய்ந்து அதற்குரிய சிகிச்சையை பெற வேண்டும்.

குடல் பகுதியில் வைரஸ் தொற்று காரணமாக இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது. குறிப்பாக பச்சிளம்  குழந்தைகள் முதல் பன்னிரண்டு வயதுக்குட்பட்ட சிறார்களை இது வெகுவாக பாதிக்கிறது.

மருத்துவரிடம் சென்றால் அவர் ரத்த பரிசோதனை மற்றும் சி. டி. ஸ்கேன் பரிசோதனையை மேற்கொள்ளுமாறு பரிந்துரைப்பார்.

இத்தகைய பரிசோதனைகளின் முடிவுகளின் படி, குடல் பகுதியில் இயல்பான அளவைவிட கூடுதலாக நினநீர் கட்டிகள் இருந்தாலோ... அவை ஒன்றுடன் ஒன்று ஒட்டியிருந்தாலோ.. இத்தகைய பாதிப்பு ஏற்படும் என்பதை சுட்டிக்காட்டி, அதற்குரிய சிகிச்சையையும் அளிப்பார்.

மருந்து மற்றும் வலி நிவாரணிகளால் முதற்கட்ட நிவாரண சிகிச்சை வழங்கப்படும். பெரும்பாலான குழந்தைகளுக்கு இத்தகைய பாதிப்பு  நன்றாக ஓய்வு எடுத்தால் தானாகவே சரியாகிவிடும்.

சிலருக்கு மட்டும் மருந்தினாலான சிகிச்சை அவசியப்படும். இதன் போது திரவ உணவை வழங்குவது பொருத்தமானதாக இருக்கும். மேலும் மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை முறைகளை பின்பற்றினால் இத்தகைய பாதிப்பிலிருந்து முழுமையான நிவாரணம் பெறலாம்.

டொக்டர் தனசேகர்
தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29