நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் வருடாந்த பரிசளிப்பு விழா பாடசாலை அதிபர் ஆர்.சிவலிங்கம் தலைமையில் புதன்கிழமை 18 ஆம் திகதி கொட்டகலை வூட்டன் ஹில்ஸ் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.
இவ்விழாவில் பிரதம அதிதியாக நுவரெலியா வலய கல்வி பணிப்பாளர் டீ.எம்.பி.லசந்த அபேரட்ண மற்றும் சிறப்பு அதிதிகளாக மேலதிக மற்றும் கோட்ட கல்வி பணிப்பாளர்கள், விசேட அதிதிகளாக கல்வியற் கல்லூரியின் பீடாதிபதிகள், பிரதேச பாடசாலை அதிபர்கள், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவ சங்கம், பெற்றோர்கள் சங்கம், உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டனர்.
இதன் போது மாணவர்களின் கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் கடந்த ஆண்டுகளில் தேசிய ரீதியில் நடைபெற்ற பரீட்சைகளில் அதிசிறந்த சித்திகளை பெற்ற மாணவர்களுக்கும் மற்றும் போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கும் பதக்கங்களும், சான்றிதழ்களும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.
இதன் போது பிரதம அதிதியாக கலந்துகொண்ட நுவரெலியா வலய கல்வி பணிப்பாளர் மற்றும் ஏனைய அதிதிகளின் சேவைகளை பாராட்டி பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களால் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM