bestweb

தென்கிழக்கு பல்கலையில் மருத்துவ பீடத்தை நிறுவ எடுக்கும் முயற்சிக்கு எனது ஒத்துழைப்பை வழங்குவேன் : வேந்தர் பாயிஸ் முஸ்தபா

Published By: Vishnu

19 Jan, 2023 | 12:09 PM
image

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி பாயிஸ் முஸ்தபா, தனது முதல் விஜயத்தினை கடந்த சனிக்கிழமையன்று மேற்கொண்டார். 

அவரது விஜயத்தினையொட்டி பல்கலைக்கழத்தில் வரவேற்பு நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

உபவேந்தர் பேராசிரியர் ஏ. றமீஸ் தலைமையில் உபவேந்தர் காரியாலயத்தில் இடம்பெற்ற இவ்வரவேற்பு நிகழ்வில், பீடாதிபதிகள், நூலகர், பதிவாளர், நிதியாளர் உள்ளிட்ட பல்கலைக்கழக அதிகாரிகள் பங்குபற்றினர்.

புதிய வேந்தர், நிகழ்வில் பங்குபற்றிய பல்கலைக்கழக அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ஒரு தேசியப் பல்கலைக்கழகமாக மிளிர்ந்து நாட்டிற்கும் சமூகத்திற்கும் ஆற்ற வேண்டிய பங்களிப்புக்கள் குறித்து நிகழ்வில் கருத்துரைத்தார்.

ஒரு முஸ்லிம் பல்கலைக்கழம் என்பதற்கு அப்பால் இலங்கை தேசத்தின் பல்கலைக்கழகங்களில்  ஒன்றாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் செயற்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். 

இந்நிகழ்வில் பல்லினங்களையும் சேர்ந்த விரிவுரையாளர்கள், ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல்கலைக்கழக சமூகத்தினருக்கான வசதி வாய்ப்புக்களையும் வேந்தர் அவர்கள் கேட்டறிந்து கொண்டதுடன் அவற்றினை எதிர்காலத்தில் விருத்தி செய்வதற்கு உபவேந்தருடன் இணைந்து செயற்படப்போவதாகவும் குறிப்பிட்டார்.  

பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழி மூலமான கற்கையினை மேலும் விரிவுபடுத்துதல், ஆங்கில மற்றும் தொழில்நுட்ப ஆற்றல்களை பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் விருத்திசெய்வதன் மூலம் அவர்களை தொழிற்சந்தைக்கு ஏற்றவர்களாக உருவாக்குதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது. 

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடம் ஒன்றினை நிறுவுவதற்காக உபவேந்தர் பேராசிரியர் ஏ. றமீஸ் எடுத்துவரும் முயற்சிக்கு தன்னால முழு ஒத்துழைப்பினையும் வழங்கப்போவதாகவும் புதிய வேந்தர் குறிப்பிட்டார்.

நிகழ்வில் புதிய வேந்தருக்கான நினைவுச் சின்னத்தினை பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ஏ. றமீஸ் வழங்கி வைத்தார். 

இக்கலந்துரையாடல் முடிவுற்றதுடன் பல்கலைக்கழக சுற்றுச்சூழலினை பார்வையிட்ட புதிய வேந்தர், பல்கலைக்கழத்தின் கலாநிதி அஷ்ரஃப் ஞாபகார்த்த நூலகத்திற்கும் விஜயம் மேற்கொண்டு அங்குள்ள நூலக வசதிகளையும் கண்டறிந்து கொண்டடார்.

வேந்தர் பாயிஸ் முஸ்தபாவுடன் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷேக் அர்கம் நூராமித் அவர்களும் இணைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2025-07-18 06:18:07
news-image

கொலை குற்றவாளிகளை பாதுகாக்கவே ரணில்-ராஜபக்ஷ தரப்பு...

2025-07-18 03:20:51
news-image

தேங்காய் எண்ணெய் சில்லறை விற்பனைத் தடைச்...

2025-07-18 03:09:46
news-image

ஈச்சிலம்பற்று திருவள்ளுவர் வித்தியாலய பௌதீக ஆசிரியர்...

2025-07-18 03:04:07
news-image

இரணைமடு குளத்தில் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்ட...

2025-07-18 02:52:33
news-image

323 கொள்கலன்கள் விடுவிப்பு முறையற்றது ;...

2025-07-17 17:05:55
news-image

பூஸா அதி உயர் பாதுகாப்பு சிறைச்சாலையின்...

2025-07-17 16:43:19
news-image

தேசிய, மதம் மற்றும் சமூக மேம்பாட்டுக்காக...

2025-07-17 22:21:36
news-image

அமெரிக்க வரிக்கொள்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்...

2025-07-17 17:17:41
news-image

புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து நடைபெறும்...

2025-07-17 21:39:52
news-image

துறைமுக நகர திட்டத்தை இரத்து செய்வதற்கு...

2025-07-17 17:36:49
news-image

செம்மணி படுகொலை : வடக்கு மற்றும்...

2025-07-17 19:57:56