துடுப்பாட்டத்தில் கில், ப்றேஸ்வெல் அசத்தல் ; இந்தியாவுக்கு பரபரப்பான வெற்றி

Published By: Digital Desk 5

19 Jan, 2023 | 09:14 AM
image

(என்.வீ.ஏ.)

ஹைதராபாத், ராஜிவ் காந்தி சர்வதேச விளையாட்டரங்கில் புதன்கிழமை (18) நடைபெற்ற மிகவும் பரபரப்பான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்தை 12 ஓட்டங்களால் இந்தியா வெற்றிகொண்டது.

இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலை அடைந்துள்ளது.

ஷுப்மான் கில் இரட்டைச் சதம் குவித்து இந்தியாவை பலப்படுத்திய போதிலும் நியூஸிலாந்தின் மைக்கல் ப்றேஸ்வெல் சதம் குவித்து இந்தியாவுக்கு கடும் சவாலை தோற்றுவித்தார்.

23 வயதான ஷுப்மான் கில் மிகக் குறைந்த வயதில் சர்வதேச ஒருநாள் இரட்டைச் சதம் குவித்த வீரர் என்ற சாதனையையும் இந்தியா சார்பாக குறைந்த போட்டிகளில் 1,000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார். அவர் தனது 19ஆவது போட்டியில் இந்த மைல்கல்லை எட்டினார்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இந்தியா 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 349 ஓட்டங்களைக் குவித்தது. அதில் அரைவாசிக்கும் மேற்பட்ட ஓட்டங்களை தனி ஒருவராக கில் பெற்றார்.

ரோஹித் ஷர்மாவுடன் ஆரம்ப விக்கெட்டில் 60 ஓட்டங்களைப் பகிர்ந்த ஷுப்மான் கில், 5ஆவது விக்கெட் ஹார்திக் பாண்டியாவுடன் மேலும் 74 ஓட்டங்களைப் பகிர்ந்தார். 5ஆவது விக்கெட் இணைப்பாட்டமே இந்திய இன்னிங்ஸில் அதிசிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது.

மிகத் திறமையாக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கில் 149 பந்துகளை எதிர்கொண்டு 19 பவுண்டறிகள், 9 சிக்ஸ்களுடன் 208 ஓட்டங்களைக் குவித்தார்.

ரோஹித் ஷர்மா (34), சூரியகுமார் யாதவ் (31), ஹார்திக் பாண்டியா (28) ஆகியோரே 25 ஓட்டங்களுக்கு மேல் பெற்ற மற்றையவர்களாவர்.

நியூஸிலாந்து பந்துவீச்சில் டெறில் மிச்செல் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஹென்றி ஷிப்லி 74 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

350 ஓட்டங்கள் என்ற கடினமான, ஆனால் எட்டக்கூடிய வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 49.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 337 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

29ஆவது ஓவரில் நியூஸிலாந்தின் 6ஆவது விக்கெட் வீழ்த்தப்பட்டபோது அதன் மொத்த எண்ணிக்கை வெறும் 131 ஓட்டங்களாக இருந்தது.

ஆனால், மைக்கல் ப்றேஸ்வெல், அணித் தலைவர் டொம் லெதம் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 162 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவுக்கு நெருக்கடியைக் கொடுத்தனர்.

78 பந்துகளை எதிர்கொண்ட மைக்கல் ப்றேஸ்வெல் 12 பவுண்டறிகள், 10 சிக்ஸ்கள் அடங்கலாக 140 ஓட்டங்களைக் குவித்து டிஆர்எஸ் முறையில் கடைசியாக ஆட்டமிழந்தார்.

தனது 17ஆவது சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடிய ப்றேஸ்வெல் குவித்த 2ஆவது சதம் இதுவாகும்.

டொம் லெதம் 57 ஓட்டங்களையும் ஃபின் அலன் 40 ஓட்டங்களையும் பெற்றனர்.

இந்திய பந்துவீச்சில் மொஹமத் சிராஜ் 46 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் குல்தீப் யாதவ் 43 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஷர்துல் தக்கூர் 54 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழைய முறைமைப்படி 16 ஆவது ஐபிஎல்...

2023-03-29 15:18:16
news-image

பெரு தேசிய கால்பந்தாட்ட அணியின் தலைவர்...

2023-03-29 14:27:18
news-image

DSI சுப்பர்ஸ்போர்ட் பாடசாலைகள் கரப்பந்தாட்டம் -...

2023-03-29 15:20:22
news-image

DanceSport ஸ்ரீலங்கா நிறுவனத்தின் இலக்கு பாரிஸ்...

2023-03-29 12:46:08
news-image

சர்வதேச போட்டிகளில் 100 ஆவது கோல்...

2023-03-29 11:35:41
news-image

197 சர்வதேச போட்டிகளில் விளையாடி சாதனை...

2023-03-28 17:28:16
news-image

வட மாகாண பட்மின்டன் போட்டியில் 3...

2023-03-28 16:27:06
news-image

லங்கா பிறீமியர் லீக் : 4ஆவது...

2023-03-28 13:46:19
news-image

இலங்கையின் உலகக் கிண்ண நேரடி வாய்ப்பு...

2023-03-28 14:15:00
news-image

U20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான குலுக்கல்...

2023-03-27 15:30:02
news-image

மகளிர் பிறீமியர் லீக் சம்பியன் பட்டத்தை...

2023-03-27 10:49:03
news-image

அருட்சகோதரர் லூக் கேடயத்தை மீண்டும் சுவீகரித்தது...

2023-03-27 09:32:11