(எம்.சி.நஜிமுதீன்)

Image result for தினேஷ் குணவர்தன virakesari

நாட்டின் சுதந்திரம், ஜனநாயகம், ஒற்றையாட்சி என்பவற்றைப் பாதுகாக்கும் வகையில் கூட்டு எதிர்க்கட்சி செயற்படுவதுடன்  சமஷ்டியை ஏற்படுத்த முனையும் சக்திகளுக்கு எதிராக போராடவுள்ளது. மேலும் அரசியலபை்பில் 14 விடயங்கள் தொடர்பில் மாற்றம் ஏற்படுத்தக்கூடாது என அரசியலமைப்பு தொடர்பில் பேச்சுவார்ததை நடத்தும் சகல குழுக்களுக்கும் கோரிக்கை விடுத்துள்ளளோம். எனவே அவற்றில் மாற்றம் ஏற்படுத்த முனைவின் கூட்டு எதிர்கட்சியின் எதிர்செயற்பாடுகளை கண்டுகொள்ள முடியும் என அவ்வெதிர்க்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார். 

கூட்டு எதிர்க்கட்சி பொரளையிலுள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.