(எம்.ஆர்.எம் வசீம், இராஜதுரை ஹஷான்)
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்தும் சட்டமூலத்தை (19) வியாழக்கிழமை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் தொடர்பிலான விசேட கலந்துரையாடல் (18) புதன்கிழமை பிற்பகல் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் விசேட கட்சித் தலைவர் கூட்டம் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது.
இதன்போதே குறித்த சட்டமூலத்தினை வியாழக்கிழமை (19) விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்ற சபைத் தேர்தலுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் செலவுகளை ஒழுங்குப்படுத்தும் வகையில் சட்டம் உருவாக்கினால் அது உள்ளூராட்சி மன்ற சபைத் தேர்தல் நடவடிக்கைக்கு பாதிப்பு ஏற்படுத்தும என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தேர்தல் செலவு ஒழுங்குப்படுத்தல் சட்ட மூலம் இடம் பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற சபைத் தேர்தலுக்கு செல்வாக்கு செலுத்தாத வகையில் இடைக்கால விதி விதானங்களை உள்ளடக்குமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர்.
தேர்தல் செலவுகள் ஒழுங்குப்படுத்தல் சட்டமூலத்தை ஒரு மாதத்திற்கு பின்னர் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள தீர்மானித்துள்ளதாக நீதி அமைச்சர் பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு கூட்டத்தில் அறிவித்துள்ள நிலையில் குறித்த தீர்மானம் ஜனாதிபதி தலைமையில் இடம் பெற்ற கூட்டத்தை தொடர்ந்து தேர்தல் செலவு ஒழுங்குப்படுத்தல் சட்டமூலம் கடும் எதிர்ப்பு க்கு மத்தியில் விவாதித்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM