பளபளப்பான சருமத்தை பெற பருக வேண்டிய ஜூஸ்கள்

Published By: Ponmalar

18 Jan, 2023 | 09:23 PM
image

அழகான, பளபளப்பான சருமத்தை விரும்பாதவர்கள் எவரும் இல்லை. சரும அழகை பேணுவதற்கு ரசாயன அழகு சாதன பொருட்களை பலரும் சார்ந்திருக்கிறார்கள். அவை எல்லோருடைய சருமத்திற்கும் ஒத்துக்கொள்வதில்லை. 

சரும பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் காய்கறி, பழங்களின் சாறுகளை தொடர்ந்து பருகி வந்தால் நிவாரணம் பெறலாம். அவை இயற்கையாகவே சரும நலன் காக்க உதவுவதோடு பளபளப்பான, பளிச் தோற்றத்திற்கும் வித்திடும். 

ஒரு டம்ளர் பழ ஜூஸ் அல்லது காய்கறி சாறு சருமத்தில் என்ன மாற்றத்தை ஏற்படுத்திவிடப்போகிறது என்று யோசித்துக்கொண்டிருக்கிறீர்களா? உண்மை என்னவென்றால், பழங்கள் மற்றும் காய்கறிகள் இரண்டிலும் என்டிஆக்சிடெண்டுகள் உள்ளன. அவை சருமத்திற்கு சேதம் விளைவிக்கும் ப்ரீ ரேடிக்கல்களை அகற்ற உதவும். வீட்டிலேயே எளிதாக தயாரித்து பருகிவிட முடியும். 

வெள்ளரிக்காய் சாறு சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவும். பளபளப்பான தோற்ற பொலிவுக்கும் வித்திடும். அதில் உள்ளடங்கி இருக்கும் அஸ்கார்பிக் அமிலம் மற்றும் காபிக் அமிலம் சருமத்தில் நீர் தேங்கி நிற்பதை தடுக்கும். இதனால் முகம் வீங்கி இருப்பது தவிர்க்கப்பட்டு பொலிவுடன் காட்சி அளிக்கும். 

கீரைகளை சமைத்து சாப்பிடுவதுபோல் ஜூஸாக தயாரித்தும் பருகலாம். இதில் விட்டமின் கே மற்றும் இரும்பு சத்து நிறைந்துள்ளது. இவை சரும அழகை மேம்படுத்தும். கீரை ஜூஸ் சுவையாக இருக்காது என்பதால் பலரும் அதனை விரும்புவதில்லை. அதனை பருகுவது உடலில் தீங்கு விளைவிக்கும் வைரஸ்களை எதிர்த்துப் போராடுவதற்கு துணை புரியும். 

கெரட் மற்றும் பீட்ரூட் ஜூஸ் இவற்றை தனியாகவோ அல்லது ஒன்றாகவோ தயாரித்து பருகி வரலாம். இந்த ஜூஸை தொடர்ந்து பருகிவந்தால் முகப்பரு, பொலிவற்ற, மென்மையற்ற சரும தோற்றம் போன்ற பிரச்சினைகளை மறந்துவிடலாம். சருமம் சார்ந்த அனைத்து பிரச்சினைகளையும் விரட்டியத்து மென்மையாகவும், பொலிவாகவும் உணர வைக்கும். 

இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு கலந்த பானத்தை பெண்கள் பலரும் தவறாமல் பருகுவார்கள். இந்த சாற்றில் பொட்டாசியம் மற்றும் நியாசின் அதிகம் கலந்திருக்கும். மேலும் முக்கியமான தாதுக்களை தக்கவைத்து, சருமத்தை மேம்படுத்த உதவும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்