(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
புனர்வாழ்வு பணியகம் சட்டமூலம் சர்வதேசம் ஏற்றுக்கொண்டுள்ள அடிப்படையில் மேற்கொள்ளப்படவேண்டும். அதனால் இதில் இருக்கும் சந்தேகங்களை போக்குவதற்கு இந்த சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்ள இடமளிக்கவேண்டும்.
என்றாலும் இந்த சட்ட மூலத்தில் இருக்கும் சில சரத்துக்களை பார்க்கும்போது அரசியலில் கடும்போக்கு கொண்டவர்களை அடக்குவதற்கான நடவடிக்கையாகவே இருக்கின்றது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (18) இடம்பெற்ற புனர்வாழ்வு பணியகம் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
புனர்வாழ்வு பணியகம் சட்டமூலத்துக்கு நாட்டின் அண்மைக்கால வரலாற்றில் ஒருபோதும் இல்லாத வகையிலேயே உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்திருந்தது.
அந்தளவுக்கு அரசியலமைப்புக்கு முற்றுமுழுதாக முரணாகவே அமைந்திருந்தது. தற்போது போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வளிப்பதற்கு என சிறிய திருத்தம் கொண்டுவந்துள்ளது.
என்றாலும் இந்த சட்ட மூலத்தில் இருக்கும் சில சரத்துக்களை பார்க்கும்போது அரசியலில் கடும்போக்கு கொண்டவர்களை அடக்குவதற்கான நடவடிக்கையாகவே இருக்கின்றது.
அத்துடன் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி அவர்களுக்கு புனர்வாழ்வு வழங்குவதாக இருந்தாலும் அதற்கு முறையான வழிமுறைகள் இருக்கின்றன இதற்கு இராணுவத்தினரை பயன்படுத்தக்கூடாது. மருத்துவர்களால் உறுதிப்படுத்தவேண்டும்.
அதேநேரம் புனர்வாழ்வு அளிக்கும் சட்டம் ஊடாக அரசாங்கத்துக்கு தேவையானவர்களை புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்ப முடியாது.
அத்துடன் புனர்வாழ்வு நிலையத்துக்கு அனுப்புபவர்கள் தொடர்பில் நீதிமன்றத்தின் அனுமதி இன்றி அதனை செய்ய முடியாது.
புனர்வாழ்வுக்கு செல்பவர்களின் விருப்பம் இல்லாமல் அரசாங்கத்துக்கு தேவையான முறையில் அதனை செய்ய முடியாது.
சர்வதேசம் ஏற்றுக்கொண்டுள்ள அடிப்படையில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கவேண்டிவரும்.
அத்துடன் கடந்த காலங்களில் கந்தகாடு போன்ற புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டவர்கள் அங்கிருந்து தப்பிச்செல்லவும்.
அங்கு பிரச்சினைகள் ஏற்படவும் இராணுவத்தினர் அவர்களை வழிநடத்திய முறையே காரணமாகும். போதைப்பொருளுக்கு அடிப்பமையானவர்களை புனர்வாழ்வுக்கு அனுப்புவதாக இருந்தாலும் அதுதொடர்பில் நீதிமன்றத்தின் அனுமதியின் பிரகாரமே செயற்பட முடியும்.
யுத்தம் முடிந்த காலப்பகுதியில் விடுதலைப்புலிகளுடன் சம்பந்தப்பட்ட ஆயிரக்கணக்கானவர்கள் புனவர்வாழ்க்காக அனுப்பப்பட்டது வேறுவிடயம். அதேபோன்று கடந்த மே, ஜூன் மாதங்களில் இடம்பெற்ற போராட்டங்களில் ஈடுபட்டவர்களை புனர்வாழ்வுக்கு அனுப்பியதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அதனால் புனர்வாழ்வு பணியகம் அமைக்கும் இந்த சட்டமூலத்தை அவசரமாக கொண்டுவராமல், இதுதொடர்பாக ஆலாேசனைக்குழுவில் தொடர்ந்தும் கலந்துரையாடி, இதில் இருக்கும் குறைபாடுகளை திருத்திக்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM