புனர்வாழ்வு பணியக சட்டமூலத்தில் அரசியல் நோக்கமும் கிடையாது - அமைச்சர் அலி சப்ரி

Published By: Vishnu

18 Jan, 2023 | 06:57 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானவர்களை நல்வழிப்படுத்தும் வகையில் புனர்வாழ்வு பணியக சட்டமூலம் கொண்டுவரப்படவுள்ளது,இதில் எந்த அரசியல் நோக்கமும்  கிடையாது என வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் (18) புதன்கிழமை இடம்பெற்ற புனர்வாழ்பு பணியகச் சட்டமூலம் மீதான விவாத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் வழக்கு மற்றும்  நீதிமன்றம் என வருடக் கணக்கில் காலத்தை வீணடிக்காமல் அவர்களின் சிறந்த எதிர்காலத்தை நிர்ணயிக்கும் வகையில் இந்த புனர்வாழ்வு பணியக சட்டம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

முன்னாள்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் விடுதலை புலிகள் அமைப்பின் போராளிகளுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டது.

அக்காலக்கட்டத்தில் சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  விடுதலை புலிகள் உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டதை எவரும் மறந்துவிடக்கூடாது.

இந்த சட்டம் மூலம் ஓரிரு தினங்களில் தயாரிக்கப்பட்டதல்ல துறை சார்ந்த சிரேஷ்ட சட்டத்தரணிகள் 300 பேரின் உழைப்பு இதில் காணப்படுகிறது.

இதில் குறைபாடுகள் காணப்பட்டால் அதனை திருத்திக்கொள்ள முடியும்.சிறந்த தீர்மானம் எல்லாவற்றுக்குமே எதிர்க்கட்சியினர் தடை போட்டு விமர்சனங்களை மேற்கொள்வது சிறந்ததல்ல அது நாட்டின் எதிர்காலத்தையே பாதிக்கும்.

இளம் தலைமுறையினர் போதைப்பொருள் பாவனைக்கு சடுதியாக அடிமையானகியுள்ளார்கள் அதேபோன்று நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் வர்த்தகத்தில்  ஈடுபடும் வலையமைப்பில் 500க்கும் மேற்பட்டவர்கள் செயல்படுகின்றனர்.

நெத்தலி மீன்களே சிறைத் தண்டனை அனுபவிக்கும் நிலையும் அதனால் பாரிய போதைப் பொருள் விலாங்குகளான  வர்த்தகர்களின்  வழக்குகளை கூட விசாரிக்க நேரம் கிடைக்காத நிலைமையே தற்போது காணப்படுகிறது.

கடந்த 2005 ஆம் ஆண்டு முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புனவாழ்வளிக்கப்பட்டனர்.

நான் அண்மையில் யாழ்ப்பாணம் சென்றபோது அவர்களில் 200 பேர் அளவில்  என்னை வந்து சந்தித்தனர். அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவுமாறு அவர்கள் கேட்டுக் கொண்டனர். 

அவர்கள் புனர்வாழ்வு செய்யப்படாமல் இருந்திருந்தால் இன்னும் சிறைகளிலேயே இருக்க நேரிட்டிருக்கும். அவர்கள் வெளிநாடு போக முடியாது. சமூகத்தில் அவர்கள் குற்றவாளிகளாகவே பார்க்கப்படுவர். அந்த நிலை மாற்றப்பட்டுள்ளது.

போதைப் பொருள் தொடர்பான குற்றவாளிகள்இ வழிதவறும் நபர்களை இலக்காகக் கொண்டே இந்த சட்டம் மூலம் கொண்டுவரப்படவுள்ளது.

குற்றவாளிகளாக காணப்படுவோர் வழக்குகளை எதிர்நோக்க நேரும். எனினும் தவறான கருத்துக்களுடன் வழிதவறும் நபர்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட  வேண்டும்.

அதன் மூலம் அவர்கள் சமூகமயப் படுத்தப்பட்டு சிறந்த எதிர்காலத்தை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரபல சிங்கள பாடகர் இராஜ் சி.ஐ.டி.யில்...

2025-03-26 16:08:00
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : ஞானசார...

2025-03-26 15:10:31
news-image

நிதி, கொள்கை வகுத்தல் மற்றும் பொருளாதார...

2025-03-26 16:04:11
news-image

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக...

2025-03-26 16:03:57
news-image

அரச உத்தியோகத்தர்களுக்கு ஏப்ரல் முதல் சம்பள...

2025-03-26 15:22:44
news-image

புத்தாண்டை முன்னிட்டு சலுகை விலையில் உணவுப்பொதி...

2025-03-26 15:12:39
news-image

ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு...

2025-03-26 15:37:56
news-image

கடும் பாதுகாப்புக்கு மத்தியில் “ஹரக் கட்டா”...

2025-03-26 15:20:15
news-image

வெளிநாட்டு அரசாங்கங்களால் துன்புறுத்தப்படும் முன்னாள் ஆயுதப்படையினரை...

2025-03-26 15:16:57
news-image

யோஷித ராஜபக்ஷ : இரவு நேர...

2025-03-26 15:02:06
news-image

ஏப்ரலில் ஸ்டாரிலிங்க் இணையச் சேவை அறிமுகம் 

2025-03-26 14:55:42
news-image

குவைத் மத்திய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த...

2025-03-26 15:01:21