வவுனியாவில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டதுடன், சந்தேக நபர் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற குறித்த முற்றுகை சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா கற்பகபுரம் பகுதியில் சட்டவிரோத மதுபானம் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைவாக வவுனியா மது ஒழிப்பு பொலிசார் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.
அப்பகுதியை சுற்றிவளைத்த பொலிஸார் இதன்போது கசிப்பு காய்ச்சுவதற்கு தயாரான நிலையில் வைக்கப்பட்டிருந்த ஒரு பெரல் 'கோடா', கசிப்பு உற்பத்தி மேற்கொள்ள பயன்படுத்தப்படும் உபகரணங்கள் ஆகியனவும் கைப்பெற்றப்பட்டதுடன் உற்பத்தியில் ஈடுபட்டிருந்த கற்பகபுரம் பகுதியை சேர்ந்த 36 வயதுடைய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரையும், மீட்கப்பட்ட உபகரணங்களும் வவுனியா பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM