சுவீகரிக்கப்பட்டுள்ள புகையிரதக் காணிகளை மீளப் பெற நடவடிக்கை - அமைச்சர் பந்துல

Published By: Vishnu

18 Jan, 2023 | 02:47 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

புகையிரதத் திணைக்களத்திற்குச் சொந்தமான காணிகளை 394 புகையிரத திணைக்கள சேவையாளர்கள் சட்டவிரோதமான முறையில் கைப்பற்றியுள்ளார்கள்.

அனுமதியின்றி சுவிகரிக்கப்பட்டுள்ள காணிகளை மீள பெற்றுக்கொள்ள சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (18) புதன்கிழமை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கிங்ஸ் நெல்சன் முன்வைத்த வாய்மூல விடைக்கான வினாக்களின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

புகையிரத திணைக்கள சேவையாளர்களில் 394 பேர் திணைக்களத்திற்கு சொந்தமான காணிகளை சட்டவிரோதமான முறையில் கைப்பற்றியுள்ளார்கள்.

இவர்களில் பெரும்பாலானோர் தற்போது சேவையில் இல்லை, ஒருசிலர் மரணமடைந்துள்ளார்கள், ஏனையோர் சேவையில் உள்ளார்கள்.

சட்டவிரோதமான முறையில் கைப்பற்றப்பட்டுள்ள காணிகளை மீண்டும் அரசுடமையாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க சட்டமாதிபர் திணைக்களத்தில் ஆலோசனை கோரப்பட்டுள்ளது.

புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான காணிகளில் தற்காலிகமாக வாழ்பவர்கள் புகையிரத திணைக்களத்திற்கு வரி செலுத்துகிறார்கள்.

ஒருசிலர் வரி செலுத்துவதில்லை,ஒருசில பகுதிகளில் வாழ்பவர்கள் பலவந்தமான முறையில் புகையிரத திணைக்கத்துக்கு சொந்தமான காணிகள் இதர நடவடிக்கைகளில் ஈடுப்படுகிறார்கள்.

புகையிரத திணைக்களத்துக்கு சொந்தமான காணியை நீண்டகால குத்தகைக்கு வழங்கு முடியாது. ஐந்து வருட காலத்திற்கு மாத்திரம் காணியை குத்தகைக்கு வழங்கும் நிபந்தனை அடிப்படையில் வழங்கும் அதிகாரம் புகையிரம திணைக்கள பொது முகாமையாளருக்கு உண்டு.

பிரித்தானியர் காலத்தில் இயற்றப்பட்ட சட்டம் புகையிரத சேவையில் இன்றும் வழக்கில் உள்ளது.புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான காணிக்குள் அனுமதி இன்றி உட்பிரவேசிப்பது. புகையிரத தண்டவாளங்களில்  அனுமதியின்றி நடப்பது தண்டனைக்கு உரிய குற்றம் என்ற கடுமையான சட்டங்கள் காணப்படுகிறது.

புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான வளங்களை பாதுகாக்க 2018 ஆம் ஆண்டு முதல் பல்வேறு தரப்பினரால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அறிக்கையின்  பிரகாரம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேசிய மாநாட்டிற்கு தயாராகுங்கள் ; கட்சி...

2026-01-25 17:33:06
news-image

மறைந்த பெருந்தலைவர் இரா. சம்பந்தன், ஒரு...

2026-01-25 16:59:19
news-image

ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் காவல் தெய்வங்களாக வெகுஜன...

2026-01-25 16:58:45
news-image

விமான நிலையத்தில் குஷ், ஹஷிஷ் போதைப்பொருள்...

2026-01-25 16:57:41
news-image

கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் தமிழ்க்...

2026-01-25 16:56:25
news-image

அரசியல் தலைவர்கள் தூக்கிபோடு எழும்பு துண்டுகளுக்கு...

2026-01-25 16:56:07
news-image

கிறிஸ்தவ மதகுரு மீது தாக்குதல்: 06...

2026-01-25 16:55:43
news-image

இயலாமையுடைய நபர்களுக்கான சேவை வழங்கலை மேம்படுத்தல்...

2026-01-25 16:53:18
news-image

முன்பள்ளிக் கல்வி சீர்திருத்தத்திற்கு வரலாற்றுச் சிறப்பான...

2026-01-25 16:33:04
news-image

கிறிஸ்தவ மதகுரு மீது தாக்குதல் ;...

2026-01-25 16:40:55
news-image

கிவுல்ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

2026-01-25 16:52:56
news-image

கொள்ளுப்பிட்டியில் துப்பாக்கிச் சூடு - பொலிஸார்...

2026-01-25 16:34:57