சமுத்திரக்கனியின் 'தலைக்கூத்தல்' படத்தின் டீசர் வெளியீடு : படத்தின் வெளியீட்டுத் திகதியும் அறிவிப்பு

Published By: Nanthini

18 Jan, 2023 | 02:57 PM
image

யக்குநரும் நடிகருமான சமுத்திரக்கனி கதாநாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'தலைக்கூத்தல்' எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. 

அத்துடன் இந்த திரைப்படம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இயக்குநர் ஜெய்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் 'தலைக்கூத்தல்'. இதில் சமுத்திரக்கனி, கதிர், 'ஆடுகளம்' முருகதாஸ், வசுந்தரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

மார்ட்டின் டான்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்துக்கு கண்ணன் நாராயணன் இசையமைத்திருக்கிறார். கிராமிய பின்னணியிலான யதார்த்த வாழ்வியலை மையப்படுத்தி தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை ஒய் நாட் ஸ்டூடியோஸ் எனும் பட நிறுவனம் சார்பில் சசிகாந்த் தயாரித்திருக்கிறார்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. 

டீசரில், கிராமப்புறங்களில் வயதானவர்களுக்கு கருணை அடிப்படையில் நிகழும் மரணத்தை மையப்படுத்திய காட்சிகள் இடம்பெற்று, பெற்றோர்களுக்கு இது போன்ற மரணத்தை ஏற்படுத்தலாமா என்ற கேள்வியுடன் நிறைவடைகிறது. 

பெற்றோர்களுக்கும் அவரது வாரிசுகளுக்கும் இடையே உணர்வுபூர்வமான உறவு இதில் காட்டப்படுவதால் இந்த டீசருக்கு ரசிகர்களிடையே பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பூஜையுடன் தொடங்கிய பிரபு தேவாவின் 'பேட்ட...

2023-06-02 10:57:34
news-image

சமுத்திரகனி நடிக்கும் 'விமானம்' பட முன்னோட்டம்...

2023-06-02 10:43:53
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' படப்பிடிப்பு...

2023-06-02 10:44:21
news-image

உதயநிதி ஸ்டாலினின் 'மாமன்னன்' ஒடியோ வெளியீடு

2023-06-02 10:43:16
news-image

எஸ்.ஜே. சூர்யாவின் 'பொம்மை' திரைப்படத்தின் வெளியீட்டு...

2023-06-02 10:46:49
news-image

ரேகா நடிக்கும் 'மிரியம்மா' பட தொடக்க...

2023-06-02 09:55:25
news-image

'எறும்பு' திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியீடு

2023-06-01 17:02:25
news-image

'டக்கர்' அதிவேகமான திரைக்கதை - நடிகர்...

2023-06-01 14:05:31
news-image

இளைய தலைமுறையினரைக் கவருமா சித்தார்த்தின் ‘டக்கர்’..?

2023-06-01 12:03:24
news-image

சுனைனா நடிக்கும் 'ரெஜினா' பட டீசர்...

2023-06-01 11:31:49
news-image

ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட ‘போர் தொழில்’படத்தின் முன்னோட்டம்

2023-05-31 14:32:35
news-image

நடிகர் குரு சோமசுந்தரம் நடிக்கும் 'பெல்'

2023-05-31 10:47:00