தற்காப்பு படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற்றது.
இதில் நடிகை நமீதா, இயக்குனர் ஆர்.பி.ரவி, தயாரிப்பாளர் செல்வமுத்து மற்றும் என்.மஞ்சுநாத், நடிகர்கள் சக்திவேல் வாசு, அஜய் பிரசாத், பொன்னம்பலம், பவன்குமார், மலேசியாவை சேர்ந்த முன்னாள் இணை ஆணையர் பெராக், டத்தோ ஏ.பரமசிவம், டொக்டர் ராஜாமணி செல்வமுத்து, TGV பிக்சர்ஸின் மேலாளர் சங்க்ஷா குவாங்(CHUNG SHYH KWONG ஆகியோர் பங்குபற்றினர்.
இதில் நடிகை நமீதா பேசும்போது ‘’தற்காப்பு என்பது தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்வது. தற்காப்பு ஆண்களை விட பெண்களுக்கு இன்றைய சூழலில் மிக அவசியம். நான் மொடலிங்கில் நுழையும்போது ‘நீங்க பெரிய பிசினஸ்மேனோட பொண்ணு. ஏன்மா இந்த ஃபீல்டுக்குள்ளலாம் வர்றே?’ என்ற ரீதியில் கேள்விகள் வந்தன. அவர்களுக்கு நான் சொன்ன பதில் ‘நமீதா என்பது என்னுடைய பெயர். அந்த பெயர் தெரிவதற்காக நான் ஏதாவது செய்ய வேண்டும். என்னதான் அப்பாவாக இருந்தாலும் அவர் வேறு நான் வேறு தான்’. இப்படி விட்டுக்கொடுக்காமல் போராடியதால் தான் மிஸ்.யுனிவர்ஸில் மூன்றாவது இடம் அளவுக்கு முன்னேற முடிந்தது.
இதுபோல இன்றைய பெண்கள் தங்கள் பெயர் தனித்து தெரிய வேண்டும் என்று தங்களுக்கு பிடித்த துறையில் சாதிக்க முயல வேண்டும். என்னுடைய சிறுவயதில் பேருந்துகளில் பயணிக்கும்போது என்னிடம் கூட சில ஆண்கள் தவறாக நடக்க முயற்சிப்பார்கள். அவர்களை விரட்ட நான் பயன்படுத்திய ஆயுதம் சேஃப்டி பின். அது எப்போதுமே என்னுடன் இருக்கும். கொஞ்சம் வளர்ந்த உடன் பெப்பர் ஸ்ப்ரே பயன்படுத்த ஆரம்பித்தேன். சேஃப்டி பின், பெப்பர் ஸ்ப்ரே இரண்டுமே பெண்கள் அவசியம் கையில் வைத்துக்கொள்ள வேண்டியவை. நமக்கானதற்காப்பு ஆயுதங்கள் அவை என்றார்.
இந்த படத்தின் நாயகன் சக்திவேல் வாசுவிற்கு அஜித், விஜய், சூர்யா, விக்ரம் என வெற்றி பெற்ற ஹீரோக்களின் குரலைப் போல தனித்து தெரியும் குரல் அமைந்திருக்கிறது. அவர்களைப் போல முக்கிய இடத்தை பிடிப்பார் சக்திவேல் வாசு. இப்படத்தின் இயக்குனர் ஆர்.பி.ரவியை ’பம்பரக் கண்ணாலே’ படத்தில் இருந்தே தெரியும். அந்த படத்தில் அவர் உதவி இயக்குனராக இருந்தார்.
இந்த தற்காப்பு படத்தின் ட்ரைலரை பார்க் கும்போது படம் நிச்சயம் வெற்றி பெறும் என உறுதியாக தெரிகிறது. அனைவருக்கும் எனது வாழ்த்துகள்’’என்றார் நடிகை நமீதா.
தகவல் : சென்னை அலுவலகம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM