இந்தியா - நியூஸிலாந்து மோதும் முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டி இன்று

18 Jan, 2023 | 01:27 PM
image

(என்.வீ.ஏ.)

இந்தியாவுக்கும் நியூஸிலாந்துக்கும் இடையிலான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹைதராபாத் விளையாட்டரங்கில் இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இந்தியாவுக்கு கிரிக்கெட் விஜயம் செய்துள்ள நியூஸிலாந்து 3 சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளிலும்  2 இருபது 20 கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடவுள்ளது.

இன்றைய முதலாவது போட்டியில் இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது.

இலங்கைக்கு எதிரான சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் 3-0 என்ற ஆட்டக் கணக்கில் முழுமையாக வெற்றியீட்டிய இந்திய அணி, அந்த உற்சாகத்துடன் நியூஸிலாந்தையும் வீழ்த்தும் முயற்சியுடன் விளையாடவுள்ளது.

இந்தியாவில் இந்த வருட இறுதியில் ஐசிசி உலகக் கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் போட்டி நடைபெறவிருப்பதால் அடுத்து நடைபெறவுள்ள ஒவ்வொரு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரும் இந்தியாவுக்கு மட்டுமல்ல ஏனைய நாடுகளுக்கும் முக்கியம் வாய்ந்ததாக அமைகிறது.

பங்களாதேஷுடனான கடைசி ஒருநாள் போட்டியிலும் இலங்கைக்கு எதிரான முதலாவது, மூன்றாவது ஒருநாள் போட்டிகளிலும் அபார சதங்களைக் குவித்த விராத் கோஹ்லி இந்தத் தொடரிலும் அசத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சதம் குவித்த மற்றொரு வீரரான ஷுப்மான் கில், அணித் தலைவர் ரோஹித் ஷர்மா ஆகியோரும் நியூஸிலாந்துக்கு சவால் ஏற்படுத்துவர் என நம்பப்படுகிறது.

இலங்கை தொடரில் விக்கெட் காப்பாளராக விளையாடிய கே.எல். ராகுலுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதால் நடப்பு தொடரில் அவர் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக இஷான் கிஷன் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

பங்களாதேஷுக்கு எதிரான சர்வதேச ஒரு நாள் போட்டியில் இஷான் கிஷா ன் ஆரம்ப வீரராக இரட்டைச் சதம் குவித்து அசத்தியிருந்தார்.

மொஹமத்; ஷமி, மொஹமத்; சிராஜ், உம்ரான் மாலிக், குல்தீப் யாதவ் ஆகியோர் பந்துவீச்சாளர்களாக இடம்பெறுகின்றனர்.

சகலதுறை வீரர் அக்சார் பட்டேலுக்கு பதிலாக வொஷிங்டன் சுந்தர் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

இதேவேளை, நியூஸிலாந்து அணியில் அணித் தலைவர் கேன் வில்லியம்சன், வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதீ ஆகியோர் இடம்பெறவில்லை. அவர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக நியூஸிலாந்து அணி முகாமைத்துவம் தெரிவித்தது.

டொம் லெதம் அணித் தலைவராக விளையாடுகிறார். 

பாகிஸ்தான் மண்ணில் அண்மையில் சர்வதேச ஒரு நாள் தொடரை 2 - 1 என வென்ற கையோடு இந்தியாவுக்கு சென்றுள்ள நியூஸிலாந்து, அங்கும் சாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் களம் இறங்கவுள்ளது.

க்ளென் பிலிப்ஸ், டெவன் கொன்வே, டொம் லெதம், டெரில் மிட்செல் ஆகியோர் துடுப்பாட்டத்திலும் பிரேஸ்வெல், சென்ட்னெர், பேர்குசன் ஆகியோர் பந்து வீச்சிலும் பிரதான வீரர்களாக இடம்பெறுகின்றனர்.

அணிகள்

இந்தியா: ரோஹித் ஷர்மா (தலைவர்), ஷுப்மான் கில், விராத் கோஹ்லி, இஷான் கிஷான், சூரியகுமார் யாதவ், ஹார்திக் பாண்டியா, வொஷிங்டன் சுந்தர், ஷர்துல் தக்கூர், குல்தீப் யாதவ், மொஹமத் ஷமி, மொஹமத் சிராஜ்

நியூஸிலாந்து: ஃபின் அலன், டெவன் கொன்வே, ஹென்றி நிக்கல்ஸ், டெறில் மிச்செல், டொம் லெதம் (அணித் தலைவர்), க்ளென் பிலிப்ஸ், மைக்கல் ப்றேஸ்வெல், மிச்செல் சென்ட்னர், ஹென்றி ஷிப்லி, லொக்கி பேர்குசன், ப்ளயார் டிக்னர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49