தலைமன்னார் கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் இன்று (21)  கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் பயன்படுத்திய 2 மீன்பிடி படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட மீன்பிடி படகுகள் மற்றும் மீனவர்கள்  மன்னார் கடற்றொழில் திணைக்களத்தில் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதுடனர்.

இதேவேளை நேற்று (20) நெடுந்தீவு கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 7 பேர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.