ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் 'ரன் பேபி ரன்' படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு

Published By: Nanthini

18 Jan, 2023 | 11:54 AM
image

டிகரும் இயக்குநருமான ஆர்.ஜே. பாலாஜி கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'ரன் பேபி ரன்' எனும் திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குநர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் 'ரன் பேபி ரன்'. இதில் ஆர்.ஜே. பாலாஜி கதாநாயகனாக நடிக்க, அவருடன் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். 

இவர்களுடன் தமிழ், ஸ்ருதி வெங்கட், ஹரிஷ் பெராடி, ஜோ மல்லூரி, விவேக் பிரசன்னா, நாக்கினீடு, ராதிகா சரத்குமார், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

எஸ்.யுவா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைத்திருக்கிறார். சஸ்பென்ஸ், த்ரில்லர் ஜேனரில் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை ப்ரின்ஸ் பிக்சர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். லக்ஷ்மன் குமார் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் காட்சித்துணுக்கு வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், இப்படத்தின் வெளியீட்டுத் திகதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி இந்த திரைப்படம் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகிறது.

நடிகர் ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் 'சிங்கப்பூர் சலூன்' எனும் திரைப்படம் தயாராகி வரும் நிலையில், அதன் பின்னர் தொடங்கப்பட்ட 'ரன் பேபி ரன்' படம் முதலில் வெளியாவது, இப்படத்தின் மீது படக்குழுவினர் வைத்திருக்கும் அதிக நம்பிக்கையை காட்டுவதாக திரையுலக வணிகர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செல்லப்பிராணியை தேடி இரு சிறார்களின் பயணத்தை...

2024-05-28 16:52:03
news-image

ரசிகர்களுக்கு இரட்டை பரிசை அளிக்கும் விஜய்

2024-05-28 16:10:02
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'காதலிக்க நேரமில்லை'...

2024-05-28 16:02:09
news-image

உருவ கேலிக்கு துணை போயிருக்கும் இசைப்புயல்...

2024-05-28 06:02:25
news-image

கார்த்தி - அரவிந்த்சாமி இணையும் 'மெய்யழகன்'

2024-05-28 06:02:57
news-image

நடிகர் துருவா சர்ஜா நடிக்கும் 'மார்டின்'...

2024-05-28 06:05:33
news-image

நம்மவர் படைப்பு!

2024-05-27 17:20:23
news-image

நடிகர் உதய் கார்த்திக் நடிக்கும் 'ஃபேமிலி...

2024-05-28 06:06:27
news-image

விக்கன் வேதம் பற்றி பேசும் 'தி...

2024-05-28 06:07:10
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-05-28 06:08:04
news-image

இறுதி கட்டப் படப்பிடிப்பில் கார்த்தியின் 'வா...

2024-05-27 17:00:55
news-image

சிவகார்த்திகேயன் நடிக்கும் 'அமரன்' படத்தின் படப்பிடிப்பு...

2024-05-27 16:00:39