தனுஷின் 'வாத்தி' திரைப்படத்திலிருந்து இரண்டாவது பாடல் வெளியீடு

Published By: Vishnu

18 Jan, 2023 | 11:55 AM
image

தனுஷ் நடிப்பில் தயாராகி, விரைவில் வெளியாக இருக்கும் 'வாத்தி' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'நாடோடி மன்னா..' என தொடங்கும் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது.

தெலுங்கின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான வெங்கி அட்லூரி இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'வாத்தி'. இதில் நடிகர் தனுஷ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா மேனன் நடித்திருக்கிறார்.

இவர்களுடன் சாய்குமார், சமுத்திரக்கனி, ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்டை ராஜேந்திரன், ஹரிஷ் பெராடி, பிரவீனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஜே யுவராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். ஆசிரியரின் வாழ்வியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சித்தாரா என்டர்டெய்ன்மெண்ட்ஸ், ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ், ஸ்ரீ காரா ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்களின் சார்பில் தயாரிப்பாளர்கள் நாகவம்சி மற்றும் சாய் சௌஜன்யா இப்படத்தை தயாரித்திருக்கிறார்கள்.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் சிங்கிள் ட்ராக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், இப்படத்தில் பாடலாசிரியர் யுகபாரதி எழுதி, அந்தோணி தாசன் குரலில் பாடிய 'நாடோடி மன்னா நான் போற பாதையில..' என தொடங்கும் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலின் லிரிக்கல் வீடியோவும் வெளியாகி இருக்கிறது. இதில் தனுஷ், ஜீ.வி. பிரகாஷ் குமார் ஆகியோரின் நடனங்களும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்திருக்கிறது.

இந்தத் திரைப்படம் அடுத்த மாதம் 17ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகிறது. தனுஷ் நடிப்பில் இந்த ஆண்டின் முதல் வெளியீடாக வெளியாகும் 'வாத்தி' வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெறுமா..! என்பதனை பொறுத்திருந்துதான் காண வேண்டும் என திரையுலக வணிகர்கள் தெரிவிக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சந்தோஷ் நாராயணன் இசையில் “ஜிகர்தாண்டா double...

2023-09-28 15:07:09
news-image

சித்தா - விமர்சனம்

2023-09-28 15:02:48
news-image

நடிகர் மதுர் மிட்டல் நடிக்கும் '800'...

2023-09-28 14:30:39
news-image

தளபதி விஜயின் 'லியோ' படத்திலிருந்து அடுத்த...

2023-09-28 12:33:16
news-image

நடிகர் ஆதி நடிக்கும் 'சப்தம்' படத்தின்...

2023-09-27 14:40:50
news-image

தன் பாலின சேர்க்கையாளர்களின் காதலை உரக்கப்...

2023-09-27 14:41:11
news-image

தளபதி விஜயின் 'லியோ' பட இசை...

2023-09-27 14:43:36
news-image

சிறிய முதலீட்டில் தயாராகி இருக்கும் 'எனக்கு...

2023-09-26 17:25:37
news-image

மணிரத்னம், கமல்ஹாசன் பாராட்டிய சித்தார்த்தின் 'சித்தா'

2023-09-26 15:57:08
news-image

ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும்...

2023-09-26 17:23:44
news-image

இரட்டைச் சாதனை படைத்திருக்கும் ஒரே இந்திய...

2023-09-26 14:51:25
news-image

வித்தியாசமாக உருவாகி இருக்கும் 'இறைவன்'

2023-09-25 13:12:03