மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 106ஆவது பிறந்ததின நிகழ்வு நேற்று (17) மாலை யாழ்ப்பாணம், கல்வியங்காடு செங்குந்தா பொதுச்சந்தை வளாகத்தில் நடைபெற்றது.
அமரர் கோப்பாய் சுந்தரலிங்கத்தின் சொந்த நிதியால் அமைக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் உருவச்சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, தீப ஆராதனையோடு மரியாதை செலுத்தப்பட்டது.
'யாழ். எம்.ஜி.ஆர்' என அழைக்கப்படும் கோப்பாய் பகுதியை சேர்ந்த எம்.ஜி.ஆரின் தீவிர இரசிகரான அமரர் சுந்தரலிங்கத்தின் துணைவியார் திருமதி. இலட்சுமி ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் திரு.எம்.கே சிவாஜிலிங்கம், வலி கிழக்கு பிரதேச சபை தவிசாளர் திரு.தியாகராஜா நிரோஷ், வலி - கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் திரு.ராசேந்திரம் செல்வராஜா, கோப்பாய் சுந்தரலிங்கம் குடும்பத்தினர் மற்றும் கல்வியங்காட்டு சமூகத்தினர் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது எம்.ஜி.ஆரின் பெயரால் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM