யாழ். மாநகரத்தின் அடுத்த முதல்வர் யார் ? தமிழரசுக் கட்சிக்குள் நீடிக்கும் குழப்பம்

Published By: Nanthini

18 Jan, 2023 | 11:03 AM
image

லங்கை தமிழரசுக் கட்சி சார்பில் யாழ். மாநகர முதல்வர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பது தொடர்பான கட்சி உறுப்பினர்களின் கலந்துரையாடலொன்று நேற்று (ஜன. 17) மாலை யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமை செயலகத்தில் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்றது. 

இதன்போது தமிழரசுக் கட்சி சார்பில் யாழ். மாநகர முதல்வர் வேட்பாளராக யாரை தெரிவுசெய்வது என்பதில் கட்சிக்குள் வேறுபட்ட கருத்துக்கள் நிலவியதால் முதல்வர் வேட்பாளர் தெரிவு குறித்து தீர்மானிப்பதற்கான கூட்டம் இணக்கமின்றி முடிவடைந்தது. 

இதனால் வேட்பாளர் தெரிவு குறித்து முடிவெடுப்பதற்கு மீண்டும் இன்றைய தினம் (18) காலை 9 மணிக்கு கட்சிக் கூட்டம் தொடர்கிறது. 

இதில் யாழ். மாநகர முதல்வர் வேட்பாளர் யார் என்பது தீர்மானிக்கப்படும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்றைய தினம் இடம்பெற்ற கட்சியினர் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் தமிழரசுக் கட்சியின் யாழ். மாநகர சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

அப்போது முன்னாள் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனோல்ட் மற்றும் சொலமன் சிறில் ஆகியோரின் பெயர்கள் யாழ். மாநகர முதல்வர் வேட்பாளர் தெரிவுக்கு முன்மொழியப்பட்டன. 

அதன் பின்னர், இவர்கள் இருவரிலும் ஒருவரை முன்மொழிவது தொடர்பில் முடிவேதும் எட்டப்படாத காரணத்தினால் கூட்டம் இணக்கமின்றி நிறைவுற்ற நிலையிலேயே, அதன் தொடர்ச்சியாக இன்று காலை மீண்டும் கலந்துரையாடல் இடம்பெறுகிறது.

எதிர்வரும் ஜனவரி 19ஆம் திகதி வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் தலைமையில் யாழ். மாநகர முதல்வர் தெரிவுசெய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33