ஹென்றியெட் 4 பந்துகளில் 4 விக்கெட்கள் வீழ்த்தி சாதனை : ருவண்டாவுக்கு முதலாவது உலகக் கிண்ண வெற்றி

Published By: Nanthini

18 Jan, 2023 | 09:52 AM
image

(என்.வீ.ஏ.)

தென் ஆபிரிக்காவில் நடைபெற்றுவரும் ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ருவண்டா வீராங்கனை ஹென்றியெட் இஷிம்வே 4 பந்துகளில் 4 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்தார்.

அவரது பந்துவீச்சின் உதவியுடன் ஸிம்பாப்வேயை 39 ஓட்டங்களால் ரூவண்டா வெற்றிகொண்டது.

இதன் மூலம் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியொன்றில் ருவாண்டா முதலாவது வெற்றியை ஈட்டி வரலாறு படைத்துள்ளது.

யோர்க்கர் பந்துகளின் மூலமே அடுத்தடுத்த 4 விக்கெட்களை வீழ்த்தியதாகவும் யோர்க்கர் பந்துகளை வீசுவதற்கென விசேட பயிற்சிகளில் ஈடுபட்டதாகவும் போட்டியின் பின்னர் ஹென்றியெட் இஷிம்வே தெரிவித்தார்.

120 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே 18ஆவது ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 80 ஓட்டங்களை பெற்றிருந்தது. 

தொடர்ந்து 19ஆவது ஓவரை வீசிய   ஹென்றியெட் முதல் 4 பந்துகளில் தொடர்ச்சியாக விக்கெட்களை வீழ்த்தி ருவண்டாவின் வெற்றியை உறுதி செய்தார்.

முதல் பந்தில் குட்ஸாய் சிகோராவை போல்ட் ஆக்கிய ஹென்றியெட் இஷிம்வே, அடுத்த பந்தில் ஒலிண்டர் சாரேயை எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழக்கச் செய்தார். 

அதனைத் தொடர்ந்து அடுத்து 2 பந்துகளில் சிப்போ மோயோ, ஃபெய்த் நிடிலாலம்பி ஆகிய இருவரினதும் விக்கெட்களை நேரடியாக பதம் பார்த்தார்.

மேலும், தொடர்ச்சியான 2 ஓவர்களில் 6 பந்துகளில் ஸிம்பாப்வேயின் 5 விக்கெட்கள் கைப்பற்றப்பட்டமை மற்றொரு விசேட அம்சமாகும். 

18ஆவது ஓவரின் 5ஆவது பந்திலும் 19ஆவது ஓவரின் முதல் 4 பந்துகளிலுமே 5 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டன.

அப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ருவண்டா 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து, 119 ஓட்டங்களை பெற்றது. 

முதல் 3 துடுப்பாட்ட வீராங்கனைகளான மெர்வில் உவாஸ் (18), சின்தியா டுயிஸியர் (30), அணித் தலைவி ஜிசெல் இஷிம்வே (34) ஆகியோரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளை பெற்றனர்.

ஸிம்பாப்வே பந்துவீச்சில் சிப்போ மோயோ 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும், குட்ஸாய் சிகோரா 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே 18.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 80 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.

துடுப்பாட்டத்தில் நட்டாஷா மிட்டொம்பே, கெலி நிடிராயா ஆகிய இருவரும் தலா 20 ஓட்டங்களை பெற்றனர்.

ருவண்டா பந்துவீச்சில் ஹென்றியெட் இஷிம்வே 3.4 ஓவர்களில் 13 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை கைப்பற்றினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35