(எம்.மனோசித்ரா)
வடக்கு மற்றும் கிழக்கில் சில பிரதேசங்களை தவிர்த்து ஏனைய அனைத்து தொகுதிகளிலும் சுதந்திர மக்கள் கூட்டணியாகவே தேர்தலில் போட்டியிடுவோம். யானை - மொட்டு கூட்டணி வெற்றி பெற வேண்டும் என விரும்புபவர்களே எமக்குள் பிளவு என்ற செய்தியைப் பரப்பியுள்ளனர் என சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
விமல், மைத்திரி, டலஸ் கூட்டணிக்குள் வேட்புமனு தாக்கல் விடயத்தில் முரண்பாடு தோற்றம் பெற்றுள்ளதாகவும் , எனவே சு.க. தனித்து போட்டியிடவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. சு.க. பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்கவும் இதனையே தெரிவித்தார்.
இந்நிலையில் இது தொடர்பில் தெளிவுபடுத்தும் போதே தயாசிறி ஜயசேகர இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
தனித்து போட்டியிட ஆரம்பத்தில் தீர்மானித்தாலும் , பின்னர் கூட்டணியிலுள்ள ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடி அந்த தீர்மானத்தில் சில மாற்றங்களை செய்துள்ளோம்.
யானை - மொட்டு கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்று எண்ணுபவர்களே எமது கூட்டணிக்குள் பிளவு என்று கூறிக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் எமது கூட்டணியில் எவ்வித பிளவுகளும் இல்லை. பல மாவட்டங்களில் நாம் ஒன்றாகவே போட்டியிட தீர்மானித்துள்ளோம்.
சில மாவட்டங்களில் மாத்திரம் கை சின்னத்தில் போட்டியிடத் தீர்மானித்துள்ளோம். கூட்டணியில் ஏதேனும் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டாலும் எமக்குள் கலந்துரையாடி அவற்றுக்கு தீர்வு காண்போம் என்றார்.
இது குறித்து விமல் வீரவன்ச தெரிவிக்கையில் ,
வடக்கு மற்றும் கிழக்கில் சில பிரதேசங்களை தவிர்த்து ஏனைய அனைத்து தொகுதிகளிலும் சுதந்திர மக்கள் கூட்டணி போட்டியிடும்.
எந்தெந்த தொகுதிகளில் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பில் இணக்கப்பாட்டுடன் தீர்மானித்துள்ளோம். எமக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்த வேண்டும் என்பது சிலரது நிலைப்பாடாகவுள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM