கடுமையான திட்டங்களை அமுல்படுத்தாவிட்டால் எதிர்காலத்தில் மிக மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் - நிதி இராஜாங்க அமைச்சர்

17 Jan, 2023 | 05:26 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

பொருளாதார மீட்சிக்காக கடுமையான திட்டங்களை அமுல்படுத்தாவிட்டால் எதிர்காலத்தில் மிக மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும். பொருளாதார ஸ்தீரத்தன்மையை சீர்குலைக்கும் வகையில் சில தரப்பினர் முன்னெடுக்கும் செயற்பாடுகள் வெறுக்கத்தக்கதாக உள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) இடம்பெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது

பொருளாதார நெருக்கடிக்கு யார் காரணம் என்று ஆய்வுகளை மேற்கொண்டால் பயணம் நீண்டு செல்லுமே தவிர தீர்வு காண முடியாது.

நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது

சமுர்த்தி கொடுப்பனவு தொடர்பில் மாறுப்பட்ட பல கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.சமுர்த்தி பயனார்களின் உண்மை தகவல்களை பிரதேச செயலக அதிகாரிகளிடம் கோரியுள்ளோம்.

அடுத்த மாதமளவில் குறித்த தகவல்களை வழங்குவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளார்கள். சமுர்த்தி  திட்ட கொள்கையை மறுசீரமைக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

நாட்டு மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் அரசாங்கம் வரி கொள்கையை அமுல்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சியினர் அரசியல் நோக்கத்தை அடிப்படையாக கொண்டு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள்.

கடுமையான தீர்மானங்களை செயற்படுத்தாவிட்டால் எதிர்காலத்தில் தற்போதைய நெருக்கடியை விட பாரதூரமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்.

எரிபொருள்,எரிவாயு மற்றும் மின்விநியோக கட்டமைப்பில் கடந்த ஆண்டின் ஆரம்ப பகுதியில் இருந்த நிலைமையை பெரும்பாலானோர் தற்போது மறந்து விட்டார்கள். கடுமையான தீர்மானங்களை செயற்படுத்தாமல் இருந்திருந்தால் இந்நிலைமை பன்மடங்கு தீவிரமடைந்திருக்கும்.

அரசாங்கம் எடுத்த ஒருசில கடுமையான தீர்மானங்களினால் பொருளாதாரம் தற்போது ஸ்தீரமடைந்துள்ளது.அரசியல் தரப்பினர் தமது அரசியல் இருப்பிற்காக நாட்டின் சட்ட ஒழுங்கை பலவீனப்படுத்தி பொருளாதார பாதிப்பை தீவிரப்படுத்தும் வகையில் போராட்டங்களில் ஈடுப்படுகிறார்கள். அரசியல் தரப்பினரது செயற்பாடு வெறுக்கத்தக்கது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53