திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நண்பகல் 1.55 மணியளவில் இந்தியா நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளார்.

பிரதமருடன் அவரது மனைவி உட்பட மேலும் இரு பிரதிநிதிகளும் இந்த விஜயத்தில் கலந்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஒருநாள் விஜயத்தை மேற்கொண்டு இந்தியா செல்லும் பிரதமர் நாளை திருப்பதி தேவஸ்தானத்தில் சிறப்புப் பூஜை வழிபாடுகளில் கலந்து கொள்ளவுள்ளார்.