கடன் மறுசீரமைப்பிற்கு சீனா ஒத்துழைப்பு வழங்கும் - பிரதமரிடம் சீன கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதி உறுதி

Published By: Digital Desk 5

17 Jan, 2023 | 03:54 PM
image

(நா.தனுஜா)

இலங்கையின் அவசியத்தேவைகள் குறித்து சீனா ஆராய்ந்துவருவதாகவும், இலங்கை தொடர்பில் சீனா மேற்கொண்டிருக்கும் சிறந்த தீர்மானத்தை வெகுவிரைவில் அறிந்துகொள்ளமுடியும் என்றும் சீன சர்வதேச திணைக்களத்தின் பிரதியமைச்சரும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான சென் ஸோ தெரிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்திருக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டப்பிரதிநிதிகளுக்கும் பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கும் இடையில் செவ்வாய்கிழமை (17) அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே சென் ஸோ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், இலங்கைக்கு அவசியமான அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்க சீனா தயாராக இருப்பதாகவும் சென் ஸோ பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் உறுதியளித்துள்ளார்.

'இலங்கை சீனாவின் முக்கிய நட்புநாடாகும். எனவே தற்போதைய நெருக்கடியிலிருந்து இலங்கையை எவ்வாறு மீட்டெடுப்பது என்பது குறித்து ஆராய்ந்துவருகின்றோம்.

அதேவேளை எதிர்வரும் வருடங்களில் இலங்கையில் பல்வேறு துறைகளிலும் சீனாவின் முதலீடுகள் அதிகரிக்குமென எதிர்பார்க்கின்றோம்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்குப் பதிலளித்துள்ள பிரதமர் தினேஷ் குணவர்தன, கடன் மறுசீரமைப்பையும் பொருளாதார மறுசீரமைப்பையும் மேற்கொள்வதற்கு சீனாவின் உதவியை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அதனை ஏற்றுக்கொண்ட சென் ஸோ, கடன் மறுசீரமைப்பிற்கு சீனா ஒத்துழைப்பு வழங்கும் என்று உறுதியளித்ததுடன் இதுகுறித்து சீனாவின் முன்னணி நிதிக்கட்டமைப்புக்கள் விரிவாக ஆராய்ந்துவருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30