சசிகுமார் நடிக்கும் 'அயோத்தி' படத்தின் முன்னோட்டம் வெளியீடு

Published By: Ponmalar

17 Jan, 2023 | 02:44 PM
image

நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'அயோத்தி' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இயக்குநர்கள் வெற்றிமாறன் மற்றும் வெங்கட் பிரபு, இசையமைப்பாளர்கள் ஜீ.வி. பிரகாஷ் குமார் மற்றும் எஸ். தமன் ஆகியோர்கள் இணைந்து தங்களது இணைய பக்கத்தில் வெளியிட்டனர்.

அறிமுக இயக்குநர் ஆர். மந்திரமூர்த்தி இயக்கத்தில் தயாராகியிருக்கும் முதல் திரைப்படம் 'அயோத்தி'. சசிகுமார் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் பொலிவுட் நடிகர் யஷ்பால் சர்மா, நடிகை ப்ரீத்தி அஸ்ராணி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு என். ஆர். ரகுநந்தன் இசையமைத்திருக்கிறார். அயோத்தி எனும் புனித தலத்தின் பின்னணியில் மரணமடைந்திருக்கும் ஒருவரின் சடலத்தை, அங்கிருந்து பிறந்த மண்ணிற்கு கொண்டு வருவதில் உள்ள சிக்கல்களையும், அரசியல் சார்ந்த பின்னணியை விவரிக்கும் இந்தத் திரைப்படத்தை டிரைடன்ட் ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். ரவீந்திரன் தயாரித்திருக்கிறார்.

படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. முன்னோட்டத்தில் ஆணவ கொலை.. மத அரசியல்.. காதல்.. என இன்றைய சமூக வாழ்வியலை மையப்படுத்தி திரைப்படம் தயாராகி இருக்கிறது என்பது தெரிய வருகிறது. இதனால் இந்த முன்னோட்டத்திற்கு இணையவாசிகளிடம் பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்