முறிவடைந்த எலும்பு ஒன்றிணைவதற்கான கால அவகாசம் என்ன?

Published By: Ponmalar

17 Jan, 2023 | 04:35 PM
image

இன்றைய சூழலில் பிறந்த பச்சிளம் குழந்தைகள் முதல் முதுமை பருவத்தில் இருக்கும் முதியோர்கள் வரை எதிர்ப்பாராத சந்தர்ப்பங்களில் விபத்தில் சிக்கி, எலும்பு முறிவு ஏற்படுகிறது. உடல் உறுப்பில் வேறு வகையான பாதிப்புகள் ஏற்பட்டால் அதற்கான முழுமையான நிவாரணம் என்பது நோயின் தன்மையை பொறுத்து, கால அவகாசம் என்பது மாறுபடும். ஆனால் எலும்பு முறிவிற்கான சிகிச்சை என்பது முற்றிலும் மாறுபட்டது. ஒருவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டால் சதாரணமாக எத்தனை நாட்கள் வரை காத்திருக்க வேண்டும் என்பது குறித்த முழுமையான விளக்கத்தை இத்துறை நிபுணரான டொக்டர் ராஜ்கண்ணா  அளிக்கிறார்.

பொதுவாக எலும்பு முறிவு மருத்துவத்தில், முறிவு ஏற்பட்ட எலும்புகள் மீண்டும் இயல்பாக இணையும் கால அவகாசம் மற்றும் எலும்பின் வலிமை தொடர்பான சிகிச்சை என இரண்டு வகையினதான நிவாரண சிகிச்சை வழங்கப்படுகிறது. அதே தருணத்தில் ஆண், பெண் என பாலின பேதமின்றி, வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் எலும்புகள் என்பது சிறியது, நடுத்தரமானது, நீண்டது என மூன்று வகையான எலும்புகள் இருக்கின்றன.

எந்த வகையினதான எலும்புகளில் முறிவு ஏற்பட்டிருக்கிறது என்பதனை பொருத்து, அதற்கான ஒன்றிணையும் கால அவகாசம் நிர்ணயிக்கப்படுகிறது. அத்துடன் எலும்பு முறிவு மருத்துவத்தில் நோயாளிகளின் வயது மற்றும் அவர்களின் எம்மாதிரியான எலும்புகளில் முறிவு ஏற்பட்டிருக்கிறது என இரண்டு விடயத்தை முன்னிறுத்தி தான் இதற்கான கால அவகாசம் மதிப்பிடப்படுகிறது.

பச்சிளம் குழந்தைகள் முதல் எட்டு வயது வரை சிறார்களுக்கு சிறிய எலும்புகள் முதல் நீண்ட எலும்புகள் வரை முறிவு ஏற்பட்டால் இதற்கான ஒன்று கூடலுக்கான கால அவகாசம் மிகக் குறைவு. இவர்களைத் தொடர்ந்து எட்டு முதல் 20 வயதினை வரை ஒரு பிரிவாகவும், 20 வயது முதல் 35 வயதினர் வரை ஒரு பிரிவாகவும், 35 வயதினர் முதல் 50 வயதினர் வரை ஒரு பிரிவாகவும், அதற்கு மேற்பட்டவர்களை மற்றொரு பிரிவாகவும் பிரித்து கால அவகாசத்தை நிர்ணயிக்கலாம்.

இவர்களுக்கு சிறிய எலும்புகளில் முறிவு ஏற்பட்டால் அவை மீண்டும் ஒன்றிணைவதற்கு ஒரு மாத காலம் அவகாசம் தேவைப்படுகிறது. இவர்களுக்கு நடுத்தர எலும்புகளில் முறிவு ஏற்பட்டால், அவை மீண்டும் ஒன்றிணைவதற்கு குறைந்தபட்சம் ஒன்றரை மாத காலம் அவசியமாகிறது. இவர்களுக்கு நீண்ட மற்றும் பெரிய எலும்புகளில் முறிவு ஏற்பட்டால், அவை மீண்டும் ஒன்றிணைவதற்கு மூன்று மாத காலம் அவசியமாகிறது. இந்த காலகட்டம் என்பது எலும்புகள் ஒன்றிணைவதற்கான காலகட்டம். இதனைத் தொடர்ந்து எலும்புகள் வலுப்பெறுவதற்கு மேலும் ஒன்று முதல் ஒன்றரை மாத காலம் அவகாசம் தேவைப்படுகிறது. வலுவடைந்த பின்னர் தான் உங்களுடைய இயல்பான நடவடிக்கையை உங்களுக்கான சௌகரியத்துடன் மேற்கொள்ள இயலும்.

அதே தருணத்தில் வயதானவர்களுக்கு மருத்துவர் பரிந்துரைத்த காலகட்டத்தில் எலும்புகள் ஒன்றிணைந்தாலும், அவை வலுபெறுவதற்கு கூடுதல் அவகாசம் வேண்டியதிருக்கும். இதனால் மருத்துவர்கள், வயதானவர்கள் எலும்பு முறிவு பாதிப்புக்கு உட்பட்டால் அவர்களுக்கு எலும்பு வலுப்பெறுவதற்கான பிரத்யேக இயன் முறை பயிற்சியை பரிந்துரைக்கிறார்கள். அதனை முழுமையாகவும், முறையாகவும் செய்து வந்தால், அவர்களின் எலும்பு ஒன்றிணைவதுடன் வலுவடையும். அதன் பிறகு இயல்பான நாளாந்த நடவடிக்கையை தொடங்க இயலும்.

அதே தருணத்தில் கை மணிக்கட்டு பகுதியில் சிறிய எலும்புகளில் முறிவு ஏற்பட்டால், முழுமையான நிவாரண சிகிச்சை அளித்து ஒன்றிணைத்தாலும் அதனுடைய பயன்பாடு பழைய நிலையில் இருக்கும் என உறுதியாக அவதானிக்க இயலாது. இருப்பினும் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் இயன்முறை சிகிச்சையையும், உணவு கட்டுப்பாட்டையும் தொடர்ந்து பின்பற்றினால் மேம்பாடு அடையும். எலும்பு முறிவு ஏற்பட்டு அது மீண்டும் ஒன்றிணைய போதுமான அவகாசத்தை அளிக்க வேண்டும். அதாவது கரு தரித்தல் நடைபெற்று குழந்தை பிரசவிக்க பத்து மாத காலம் அவகாசம் இருப்பது போல், முறிவடைந்த எலும்பு மீண்டும் ஒன்றிணைவதற்கும் அவகாசம் அளிக்க வேண்டும். இவ்விடயத்தில் அவசரம் காட்டினாலோ அல்லது அலட்சியம் காட்டினாலோ நோயாளிக்கு தான் அதிக அளவிலான பாதிப்பு ஏற்படும் என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29