உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஆரம்பம்

Published By: Vishnu

17 Jan, 2023 | 03:47 PM
image

(எம்.மனோசித்ரா)

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (18) புதன்கிழமை  ஆரம்பமாகி , சனிக்கிழமையுடன் நிறைவடையவுள்ளது.

அத்தோடு கட்டுப்பணம் செலுத்துவதற்கான இறுதி நாள் வெள்ளிக்கிழமையாகும் என்று தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடர்பில் கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

17 ஆம் திகதி புதன்கிழமை காலை 8.30 மணி முதல் 21 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்புமனு தாக்கல் இடம்பெறும்.

அதனைத் தொடர்ந்து நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரையான ஒன்றரை மணித்தியாலங்கள் ஆட்சேபனைகளை தெரிவிப்பதற்கான காலமாகும்.

ஆட்சேபனை தெரிவிப்பதற்கான காலம் நிறைவடைந்ததன் பின்னரே தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் தொடர்பில் அறிவிக்கப்படும். இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து தேர்தலுக்கான தினம் அறிவிக்கப்படும்.

அத்தோடு 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணியுடன் கட்டுப்பணம் ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கைகளும் நிறைவடையவுள்ளன.

(17) செவ்வாய்கிழமை காலை வரை 25 மாவட்டங்களில் 22 கட்சிகள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி

2024-04-16 14:42:04
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37