மேற்கிந்திய தீவு கிரிக்கெட் வீரர் என்ரு ரொஸலின் துடுப்பாட்ட மட்டைக்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் தடை விதித்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுவரும் பிக் பேஸ் கிரிக்கெட் லீக்கில் சிட்னி தண்டர்ஸ் அணிக்காக விளையாடிவரும் ரொஸல் கறுப்பு நிறத்திலான துடுப்பாட்ட மட்டையை பயன்படுத்துகின்றார்.

இந்நிலையில் கறுப்பு நிறத்திலான துடுப்பாட்ட மட்டையால் பந்துக்கு சேதம் ஏற்படுவதாக தெரிவித்து நடுவர்கள் முறையிட்டதன் அடிப்படையில் குறித்த துடுப்பாட்ட மட்டைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த துடுப்பாட்ட மட்டையை பயன்படுத்துவதற்கு ஆரம்பத்தில் அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.