(எம்.மனோசித்ரா)
இலங்கையின் பிரதான கடன் வழங்குனர்களாக இந்தியா, சீனா மற்றும் ஜப்பானிடமிருந்து கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சாதகமான பதில் கிடைக்கப் பெற்றுள்ளது.
எனவே ஏப்ரலுக்குள் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியும் என்று அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (17) இடம்பெற்றது. இதன் போதே அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
'கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சாதகமான பதில் கிடைக்கப் பெற்றுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சரால் அமைச்சரவைக்கு தெரிவிக்கப்பட்டது.
இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் என்பவற்றுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டு வருவதாகவும் அந்த இணக்கப்பாட்டுக்கமைய சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தில் இவ்வாண்டின் முதற் காலாண்டுக்குள் கையெழுத்திட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.' என்றார்.
இந்நிலையில் இரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் நாளை வியாழக்கிழமை கொழும்பிற்கு வரவுள்ளார்.
கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கடன் வழங்குனர்களிடமிருந்து அரசாங்கம் ஸ்திரமான பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் ஜெங்சங்கரின் வருகையானது முக்கியத்துவம் மிக்கதாகவுள்ளது.
அமைச்சர் ஜெய்சங்கருக்கும் , ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உள்ளிட்ட அரசாங்கத்தின் உயர் மட்டத்தினருக்குமிடையிலான சந்திப்பின் போது கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து அவதானம் செலுத்தப்படவுள்ளது.
மறுபுறம் உயர்மட்ட குழுவொன்று உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த சனிக்கிழமை கொழும்பை வந்தடைந்த சீன சர்வதேச திணைக்களத்தின் பிரதியமைச்சர் சென் ஸோ தலைமையிலான சீன கம்யூனிஸ் கட்சி நாட்டில் தங்கியிருந்த காலப்பகுதியில் பல முக்கிய சந்திப்புக்களில் ஈடுபட்டிருந்தது.
இதே வேளை கடந்த 11 ஆம் திகதி ஜப்பானிய அமைச்சரவை அலுவலக இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட குழுவினரும் நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்தனர்.
ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது , இலங்கையில் புதிய முதலீடுகள் உள்ளிட்ட பல்வேறு பொருளாதார விடயங்கள் தொடர்பில் இக்குழு கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜப்பான் மற்றும் சீன உயர்மட்ட குழுவினர் வருகை , இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சரின் வருகை என்பவற்றின் அடிப்படையிலேயே கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் சாதகமான பதில்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், விரைவில் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியும் என்றும் அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM