பெருந்தோட்ட மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய வகையில் தேசிய கொள்கைத் திட்டங்களுக்குள் உள்வாங்க வேண்டும் - வடிவேல் சுரேஷ்

Published By: Vishnu

17 Jan, 2023 | 03:40 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

மலையக பெருந்தோட்ட மக்கள் அடிப்படை வசதிகளுடன் சுதந்திரமாக வாழக்கூடிய வகையில் தேசிய கொள்கைத் திட்டங்களுக்குள் அவர்களை உள்வாங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (17) செவ்வாய்க்கிழமை வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது, குறிப்பிடுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்கென தேசிய கொள்கைத் திட்டங்கள் உள்ளன. ஆனால் பெருந்தோட்ட மக்கள் இந்த கொள்கைத் திட்டத்திற்குள் உள்வாங்கப்படவில்லை.

இதற்காக இந்த மக்கள் தோட்ட கம்பனிக்காரர்களிடமே போக வேண்டியுள்ளது. இலங்கையில் 15 இலட்சம் பெருந்தோட்ட மக்கள் உள்ளனர்.

இந்நிலையில் நாட்டில் 25 மாவட்டங்களின் 10 மாவட்டங்களில் பெருந்தோட்ட மக்கள் இருக்கின்றனர். இந்த மாவட்டங்களின் பெருந்தோட்டங்களை மூன்று பேரே நிர்வகிக்கின்றனர்.

அந்தக் கம்பனிக்காரர்களுக்கு இந்த மக்கள் எழுதிக்கொடுக்கப்பட்டுள்ளார்களா?. அனைத்து தேர்தல்களிலும் வாக்களிக்கும் இந்த மக்களை ஏன் தேசிய கொள்கைக்குள் உள்வாங்க முடியவில்லை.

மின்சாரம், வீடு அமைத்தல், மலசல கூடத்தை அமைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக தோட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டியுள்ளது.

யுத்தக் காலத்திலும் பெருந்தோட்ட மக்கள் இந்த நாட்டுக்காக உழைத்தவர்கள். கொவிட் காலத்திலும் அவர்கள் வேலைக்கு போனார்கள். இவ்வாறானவர்களை ஏன் ஒதுக்க வேண்டும்.

இதனால் இந்த மக்கள் தொடர்பில் பாராளுமன்றத்தின் ஊடாக வாவது தீர்மானத்தை வழங்க வேண்டும். பெருந்தோட்ட மக்கள் இங்கே வந்து 200 வருடங்களாகிவிட்டன. இந்த நேரத்திலாவது இந்த மக்களை தேசிய கொள்கைக்குள் உள்வாங்க வேண்டும்.

மலசல கூடத்தை அமைப்பதற்குகூட தோட்ட கம்பனியின் அனுமதியை பெற வேண்டுமென்றால், பிள்ளை பெற வேண்டுமென்றாலும் தோட்ட முகாமையாளரிடம் கடிதம் பெற வேண்டும் என்றால் இதனை செய்ய முடியுமா?

இந்த சமூகத்தில் இருந்து படித்தவர்கள் உருவாகியுள்ளனர். இவர்களிடையே இனவாதம் கிடையாது. இலங்கையர்களாகவே வாழ்கின்றனர். இதனால் இந்த விடயத்தில் தீர்வு காண வேண்டும் என்று சபாநாயகரிடம் கேட்கின்றேன்.

இந்த நேரத்தில் ஜனாதிபதி உணவுப் பாதுகாப்பு பற்றி கூறுகின்றார். பெருந்தோட்டங்களில் காணிகள் கைவிடப்பட்டிருக்கையில்  எப்படி உணவுப் பாதுகாப்பை பேண முடியும்.

இந்நிலையில் இந்த மக்களை அடிப்படை வசதிகளுடன் சுதந்திரமாக வாழ்வதற்கு இடமளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். தேசிய தீர்மானங்களின் போது எமது மக்களையும் ஒதுக்கி வைக்காது சேர்த்துகொள்ளுங்கள் என்றார்.

இதன்போது பதிலளித்த பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரண கூறுகையில்,

70,000 ஹெக்டேயர் காணிகள் பெருந்தோட்ட நிறுவனங்களிடம் பயன்பாடு இன்றி காணப்படுகின்றன. அந்த காணிகளுடன் மேற்கொள்ளப்பட்டிருப்பது மிகவும் பலவீனமான ஒப்பந்தமாகும்.

அதனால் வெற்றிடமாகி இருக்கும் காணிகளை மீள அரசாங்கம் கையகப்படுத்த கோத்தாபய ராஜபக்ஷ் ஜனாதிபதி அமைச்சரவைக்கு முன்வைத்த பிரேரணை அமைச்சரவை அனுமதி அளித்தது.

இது சட்டமூலம் தயாரிப்புக்காக அனுப்பப்பட்டுள்ளது. அதனால்  இந்த காணிகளை அரசாங்கத்துக்கு மீள பெற்றுக்கொள்ள சட்ட மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58