மியன்மார் இராணுவம் தனது சொந்த மக்களிற்கு எதிராக பயன்படுத்துவதற்காக ஆயுதங்களை தயாரிக்கின்றது - ஐநாவின் முன்னாள் அதிகாரிகள்

Published By: Rajeeban

17 Jan, 2023 | 01:04 PM
image

மியன்மார் இராணுவம் தனது சொந்த மக்களிற்கு எதிராக பயன்படுத்துவதற்காக பெருமளவில் ஆயுதங்களை  தயாரித்து வருவதாக  தெரிவித்துள்ள ஐநாவின் முன்னாள் உயர் அதிகாரிகள் 13 நாடுகளை சேர்ந்த நிறுவனங்களின் விநியோகங்களை பயன்படுத்தியே மியன்மார்  ஆயுதங்களை உற்பத்தி செய்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

மியன்மார் தொடர்பான விசேட ஆலோசனை குழுவே தனது அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

மியன்மாரை தனிமைப்படுத்துவதற்காக மேற்குலகம் தடைகளை விதித்துள்ள போதிலும் இந்தியா அமெரிக்கா பிரான்ஸ் உட்பட பலநாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் வழங்கும் விநியோகங்களை பயன்படுத்தி மியன்மார்  ஆயுதங்களை உற்பத்தி செய்கின்றது என ஐநா தொடர்பான விசேட ஆலோசனை குழு  தெரிவித்துள்ளது.

உள்நாட்டில் தயாரிக்கப்படும் ஆயுதங்களை இராணுவத்தினை எதிர்ப்பவர்களிற்கு எதிரான அநீதிகளிற்கு மியன்மார் பயன்படுத்துகின்றது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐநாவின் உறுப்புநாடுகள் பல தொடர்ந்தும் மியன்மாருக்கு ஆயுதங்களை விற்பனை செய்கின்றன ஐநாவின் முன்னாள் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட நிறுவனங்கள் மியன்மாரிற்கு மூலப்பொருட்களை பயிற்சிகளை இயந்திரங்களை வழங்குகின்றன இதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் ஆயுதங்களை மியன்மார் தனது எல்லையை காப்பதற்கு பயன்படுத்துவதில்லை எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13