தமிழ் திரையுலகில் கவர்ச்சி நடிகையாக வலம் தரும் 'பிக் பொஸ்' பிரபலம் நடிகை யாஷிகா ஆனந்த் கதையின் நாயகியாக நடித்திருக்கும் 'சைத்ரா' திரைப்படத்தின் ஃபெர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதனை இசையமைப்பாளர் பாடகருமான டி. இமான் தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
அறிமுக இயக்குநர் எம். ஜெனித்குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'சைத்ரா'. சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பிரபாகரன் மெய்யப்பன் இசையமைத்திருக்கிறார்.
ஹாரர் திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மார்ஸ் புரொடக்ஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. மனோகரன் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபெர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. விரைவில் டீசர் மற்றும் சிங்கிள் ட்ராக் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'இருட்டு அறையில் முரட்டு குத்து' எனும் திரைப்படத்தில் கவர்ச்சி பேயாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை யாஷிகா ஆனந்த், மீண்டும் பேயாக நடித்திருப்பதால், 'சைத்ரா' திரைப்படத்திற்கும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM