யோகி பாபு நவ நாகரீக மங்கையாக தோன்றும் 'மிஸ் மேகி'

Published By: Digital Desk 5

17 Jan, 2023 | 12:17 PM
image

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகி பாபு கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடிக்கும்  புதிய திரைப்படத்திற்கு, 'மிஸ் மேகி' என பெயரிடப்பட்டு, டைட்டிலுக்கான பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குநர் லதா ஆர். மணியரசு இயக்கத்தில் தயாராகி வரும் முதல் திரைப்படம் 'மிஸ் மேகி'. இதில் யோகி பாபு நவ நாகரீக மங்கை வேடத்தில் நடிக்கிறார். இவருடன் 'மெஹந்தி சர்க்கஸ்' படப் புகழ் நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ், நடிகை ஆத்மிகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கார்த்திக் இசையமைத்திருக்கிறார். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ட்ரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். சக்திவேல் தயாரித்திருக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் டைட்டிலுக்கான டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் யோகி பாபு நவநாகரிக பெண்மணியாக தோன்றும் காட்சிகள் இடம்பெற்றிருப்பதால் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

நகைச்சுவை நடிகர்கள் பெண் வேடத்தில் நடிப்பதற்கும், நட்சத்திர நடிகர்கள் பெண் வேடத்தில் நடிப்பதற்கும் இடையே வேறுபாடுகள் இருந்தாலும், யோகி பாபு பிரத்யேக ஒப்பனையுடன் நவநாகரிக மங்கையாக தோன்றுவதால் 'மிஸ் மேகி' படத்திருக்கான ஆதரவு திரையுலக வணிகர்களிடத்தில் கிடைத்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அருள்நிதி நடிக்கும் 'அருள்வான்' படத்தின் அப்டேட்

2026-07-14 17:21:12
news-image

ட்ரெயின்' படத்தை கமல்ஹாசனால் கூட நடித்திருக்க...

2026-07-14 16:42:50
news-image

புதுமுகங்கள் நடிக்கும் 'ஆண்ட' டைட்டில் லுக்...

2026-07-14 16:40:34
news-image

கல்லூரி மாணவர்களின் ரீயூனியன் கதையை இயக்கும்...

2026-07-14 15:59:48
news-image

ஞானபீட விருதை பெற்ற கவிப்பேரரசு வைரமுத்து

2026-07-14 15:58:27
news-image

டொக்டர் சிவராஜ் குமார் நடிக்கும் 'வெல்கம்...

2026-07-14 15:37:24
news-image

நடிகர் பகத் பாசில் நடிக்கும் 'டோன்ட்...

2026-07-13 17:15:25
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும்...

2026-07-13 16:38:42
news-image

ஆங்கிலோ- இந்திய சமூக மக்களின் வாழ்வியலை...

2026-07-13 16:35:45
news-image

திரு வீர்- ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து...

2026-07-13 16:33:09
news-image

இசை குயில் 'எஸ். ஜானகிக்கு இந்தியத்...

2026-07-12 14:14:16
news-image

புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி...

2026-07-11 21:42:07