இரவு நேர களியாட்டத்துக்கு செல்வதற்காக தாய் ஒருவர் தனது குழந்தை வீட்டில் தனிமையாக விட்டுச் செல்ல, குறித்த குழந்தையை இராட்சத எலி ஒன்று கடித்து கொலை செய்துள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம் தென்னாபிரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

தென்னாபிரிக்காவின் ஜொகனஸ்பேர்க்கின் கெட்லொங் நகரப் பகுதியில் வசிக்கும் 26 வயதுடைய தாய் ஒருவர், தனது இரட்டைக் குழந்தைகளில் ஆண் குழந்தையை மாத்திரம் தூக்கிக்கொண்டு பெண் குழந்தையை வீட்டில் தனியாக விட்டுச் சென்றுள்ளார்.

இரவு களியாட்டங்கள் முடிந்து தனது புதிய காதலனுடன் வீட்டிற்கு வந்த தாய், குழந்தை இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ந்துள்ளார். குழந்தையின் உடலில் இராட்சத எலியின் கூறிய பற்களால் கடிக்கப்பட்ட அடையாளங்கள் காணப்பட்டுள்ளன.

எலி குழந்தையின் உடற்பாகங்களை தின்றுள்ளதோடு எஞ்சிய சில பாகங்கள் மாத்திரமே வீட்டில் கிடந்துள்ளன. 

அயலவர்கள் இச்சம்பவம் பற்றி கூறும் போது, குறித்தப் பெண் வருட ஆரம்பம் முதலே அடிக்கடி இவ்வாறு குழந்தையை தனிமையில்

விட்டு  குடிக்கச் சென்று விடுவதாகவும்,  குழந்தைப்பற்றி யாராவது கேட்டால் அது தனது சகோதரியிடத்தில் இருப்பதாகவும் கூறுவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.

குறித்த குழந்தை தொடர்ச்சியாக அழுத நிலையில் உறக்கத்திற்கு செல்வது வழமையாக இடம்பெற்று வருகின்றது.

அப்பெண் தாயாக இருப்பதற்கு தகுதியற்றவள். ஒரு குழந்தையை குடிக்குமிடத்திற்கு கூட்டிச் சென்றதால் அக்குழந்தை அதி~;டவசமாக உயிர் தப்பியுள்ளது. 

இப்பகுதியில் எலிகள் அதிக இருப்பது தெரிந்தும் குழந்தையை விட்டு சென்ற இப் பெண்ணை கட்டாயம் சிறையில் அடைத்து சித்திரவதை செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளனர்.

இந்நிலையில் குழந்தையை சரியான முறையில் பராமரிக்காமல் இருந்த குற்றத்திற்காக குறித்த பெண்ணை பொலிஸார் சிறையில் அடைத்துள்ளனர்.

இதேவேளை உடன்பிறந்த ஆண் குழந்தையை அவரின் தந்தையிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.