சிலுவைப்பட்டி புனித அந்தோணியார் ஆலய திருவிழா, கொடியேற்றத்துடன் நேற்று (ஜன. 15) கோலாகலமாக தொடங்கியது.
தமிழகத்தின், தூத்துக்குடி மறைமாவட்டம் சிலுவைப்பட்டியில் அமைந்துள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா, ஆண்டுதோறும் தை மாதம் 1ஆம் திகதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடர்ந்து 13 நாட்கள் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டின் திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை 11 மணிக்கு செபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் போன்றவை நடைபெற்றது.
அதை தொடர்ந்து நண்பகல் 12 மணிக்கு தாளமுத்து நகர் பங்குத்தந்தையர்கள் நெல்சன் ராஜ், வின்சென்ட் தலைமையில் தேவ மாதாவுக்கும் புனித அந்தோணியாருக்கும் பொன் மகுடம் சூட்டப்பட்டது.
இரவு 7 மணிக்கு மறைமாவட்ட முன்னாள் ஆயர் இவான் அம்புரோஸ் தலைமையில் கொடியேற்றமும், அதனை தொடர்ந்து ஆடம்பர கூட்டுத் திருப்பலி மற்றும் மறையுரை நடந்தது.
இதில் ஏற்றங்கோடு பங்குத்தந்தை சேவியர் சுந்தர், டி.சவேரியார்புரம் பங்குத்தந்தை குழந்தை ராஜன், தருவைக்குளம் பங்குத்தந்தை வின்சென்ட், ஆயர் இல்ல தந்தையர் ராஜன் மற்றும் ஜோசப் இசிதோர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து ஜனவரி 27ஆம் திகதி வரை நடைபெறும் திருவிழாவின் நவநாட்களில் காலை 6 மணி மற்றும் மாலை 7 மணிக்கு திருப்பலி, செபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் போன்றவை நடைபெறவுள்ளன.
11ஆம் திருவிழாவான வருகிற 25ஆம் திகதி காலை 6 மணிக்கு நவநாள் திருப்பலியும், மாலை 7 மணிக்கு செபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் போன்றவையும், இரவு 9 மணிக்கு புனித அந்தோணியாரின் சப்பர பவனியும் நடைபெறவுள்ளது.
12ஆம் திருவிழாவான 26ஆம் திகதி காலை 6 மணிக்கு மண்ணின் மைந்தர்களான அருட்பணி சகாய ஜஸ்டின், அருட்பணி டேவிட் செல்வராஜ், அருட்பணி நிலவன் ஆகியோர் தலைமையில் நவநாள் திருப்பலி மற்றும் ஞானஸ்நானம் வழங்கப்படுகிறது.
மாலை 7 மணிக்கு, திருவிழா மாலை ஆராதனை மற்றும் 99ஆவது ஆண்டு திவ்ய நற்கருணை பவனியும் நடைபெறவுள்ளது.
13ஆம் திருவிழாவான வரும் 27ஆம் திகதி காலை 6 மணிக்கு திருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலியும், புதுநன்மை வழங்குதலும் நடைபெறவுள்ளது.
காலை 10 மணிக்கு புனித தேவ அன்னை மற்றும் புனித அந்தோணியார் சப்பர பவனி நடைபெறும்.
மாலை 6 மணிக்கு நற்கருணை ஆசீரும் அதனைத் தொடர்ந்து கொடியிறக்கமும் நடைபெறுகிறது.
இவ்விழா ஏற்பாடுகளை சிலுவைப்பட்டி இறைமக்கள் மற்றும் ஊர் நிர்வாகிகள், புனித அந்தோணியார் இளைஞர் இயக்கத்தினர் இணைந்து செய்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM