பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட பெரும்பாலானோர் விண்ணப்பித்துள்ளார்கள் - சாகர காரியவசம்

Published By: Vishnu

17 Jan, 2023 | 12:37 PM
image

(இராஜதுரை ஹஷான்)

உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் ஒருசில மாவட்டங்களில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடவும், ஒருசில மாவட்டங்களில் பொதுஜன பெரமுன சின்னத்தில் போட்டியிடவும் தீர்மானித்துள்ளோம்.

பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட பெரும்பாலானோர் விண்ணப்பித்துள்ளார்கள், மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வேட்புமனுக்கல் வழங்கப்படும் என்பதை நாட்டு மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பெரமுன காரியாலயத்தில் இன்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது.

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் நடவடிக்கைகளில் ஏனைய அரசியல் கட்சிகளை காட்டிலும் பொதுஜன பெரமுன சிறந்த முறையில் ஈடுபடுகிறது. பெரும்பாலான மாவட்டங்களுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளோம். நாளை வேட்பு மனுக்கலை தாக்கல் செய்வோம்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தின் மீது கடந்த காலங்களில் திட்டமிட்ட வகையில் போலி குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.பொய் பிரசாரங்கள் இறுதியில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தின. ஜனநாயகத்திற்கு எதிரான போராட்டங்கள் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் எதிர்பாராத மாற்றத்தை ஏற்படுத்தின.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்தை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றியுடன் தொடர்புப்படுத்தி பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரவேற்கத்தக்கது.உண்மை என்றாவது ஒரு நாள் வெளிவரும்.

நாடு பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள பின்னணியில் பிரதான அரசியல் கட்சிகள் முரண்பட்டுக் கொண்டிருந்தால் நாடு மேலும் பாதிக்கப்படும் என்பதால் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளோம்.

ஒருசில மாவட்டங்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானை சின்னத்திலும்,ஒருசில மாவட்டங்களில் பொதுஜன பெரமுனவின் மொட்டுச் சின்னத்திலும்,பொதுச் சின்னத்திலும் போட்டியிட தீர்மானித்துள்ளோம்.ஏனைய அரசியல் கட்சிகளையும் விட எமது கூட்டணி அமோக வெற்றிப்பெறும்.ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒப்பந்த அடிப்படையில் ஒன்றிணைய தீர்மானித்துள்ளோம்.

பொதுஜன பெரமுனவிற்கு கிடைக்கப் பெற்ற மக்களாணையை கொள்ளையடித்தவர்கள் தற்போது ஹெலிகொப்டர் சின்னத்தில் புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கியுள்ளார்கள். இந்த கூட்டணியில் உள்ள அனைவருக்கும் தலைமைத்துவம் மீது விருப்பு உள்ளதால் அந்த கூட்டணி தலைமைத்துவம் இல்லாமல் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06