இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகை நேற்றைய தினம் (ஜன. 15) உலகளாவிய ரீதியில் நடைபெற்றது.
பொங்கலுக்கு அடுத்த நாளான இன்று திங்கட்கிழமை உழவுத் தொழிலுக்கு அளப்பரிய பணியாற்றிய பசுக்களுக்கும் காளைகளுக்கும் 'பட்டிப் பொங்கல்' கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் இன்று யாழ். வட்டுக்கோட்டை - அராலி உப்புவயல் குளத்தருகில் பட்டிப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு கலாநிதி சிதம்பரமோகன் தலைமையில் நடைபெற்றது. இதில் யாழ். இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கர் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டார்.
இந்தியாவின் புனித காசி தலத்திலிருந்து கலாநிதி சிதம்பரமோகனால் எடுத்துவரப்பட்ட தீர்த்தம் இதன்போது யாழ். இந்திய துணைத் தூதுவரால் குளத்தில் கலக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து பட்டிப் பொங்கல் நிகழ்வு நடைபெற்றது.
மேலும், இந்நிகழ்வில் நாக விகாரை விகாராதிபதி, வலி. மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM