5 அணிகள் மோதும் தேசிய சுப்பர் லீக் கிரிக்கெட் 19ஆம் திகதி ஆரம்பம்

Published By: Vishnu

16 Jan, 2023 | 04:16 PM
image

(நெவில் அன்தனி)

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய சுப்பர் லீக் (National Super League) 4 நாள் கிரிக்கெட் சுற்றுப் போட்டி எதிர்வரும் 19ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

இந்த சுற்றுப் போட்டியில் கொழும்பு, தம்புள்ளை, காலி, கண்டி, யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களின் பெயர்களில் 5 அணிகள் பங்குபற்றுகின்றன.

இந்த ஐந்து அணிகளிலும் தேசிய வீரர்கள், முன்னாள் தேசிய அணி தலைவர்கள் இடம்பெறுகின்றனர்.

குசல் மெண்டிஸ் (கொழும்பு), கமிந்து மெண்டிஸ் (தம்புள்ளை), ரமேஷ் மெண்டிஸ் (காலி), தனஞ்சய டி சில்வா (யாழ்ப்பாணம்), நிரோஷன் திக்வெல்ல (கண்டி) ஆகியோர் அணித் தலைவர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

இந்த ஐந்து அணிகளிலும் சிறுபான்மையினருக்கு இடம் கிடைக்காதது ஆச்சரியத்தைக் கொடுக்கிறது.

முதல் சுற்றுப் போட்டிகள் 19ஆம் திகதி ஆரம்பமாகி பெப்ரவரி 2ஆம் வாரத்தில் நிறைவுபெறும். இப் போட்டிகள் கொழும்பு, கண்டி, தம்புள்ளை, ஹம்பாந்தோட்டை, காலி ஆகிய நகர்களில் உள்ள பிரதான மைதானங்களில் நடைபெறும்.

முதல் சுற்று முடிவில் முதல் 4 இடங்களைப் பெறும் அணிகள் அரை இறுதிகளில் விளையாட தகுதிபெறும்.

அரை இறுதிப் போட்டிகள் கொழும்பில் 2 மைதானங்களில் பெப்ரவரி 23, 24, 25, 26ஆம் திகதிகளிலும் இறுதிப் போட்டி காலியில் மார்ச் 2, 3, 4, 5ஆம் திகதிகளில் நடைபெறும்.

அணிகள்

கொழும்பு: குசல் மெண்டிஸ் (தலைவர்), திமுத் கருணாரட்ன (உதவித் தலைவர்), அவிஷ்க பெர்னாண்டோ, நிப்புன் தனஞ்சய, ஹேஷான் தனுஷ்க, சரித் அசலன்க, நுவனிது பெர்னாண்டோ, தசுன் ஷானக்க, அஷேன் பண்டார, மனோஜ் சரத்சந்த்ர, ரொஷேன் சில்வா, லக்சித்த மனசிங்க, கவிந்து நடீஷான், இஷ்த விஜேசுந்தர, கசுன் ராஜித்த, நுவன் ப்ரதீப், நிசல தாரக்க, கலன பெரேரா, ப்ரபாத் ஜயசூரிய, தரிந்து ரட்நாயக்க.

தம்புள்ளை: கமிந்து மெண்டிஸ் (தலைவர்), மினோத் பானுக்க (உதவித் தலைவர்), சஹான் நிமேஷ குணசிங்க, லியோ கேன் பிரான்சிஸ்கோ, கயான மனிஷான், அபிஷேக் லியனஆராச்சி, டிலான் ஜயலத், லசித் அபேரேத்ன, அஷான் ப்ரியஞ்சன, வனிந்து ஹசரங்க, லஹிரு சமரக்கோன், சமிந்த விஜேசிங்க, சனோஜ் தர்ஷிக்க, அசித்த பெர்னாண்டோ, விஷ்வா பெர்னாண்டோ, அனுக் பெர்னாண்டோ, துவிந்து திலக்கரட்ன, லக்ஷான் சந்தகேன், மலிந்து புஷ்பகுமார, துஷான் ஹேமன்த.

காலி: ரமேஷ் மெண்டிஸ் (தலைவர்), சங்கீத் குறே (உதவித் தலைவர்), ஹஷான் துமிந்து, லக்ஷான் எதிரிசிங்க, ஏஞ்சலோ மெத்யூஸ், தினேஷ் சந்திமால், பசிந்து சூரியபண்டார, துலின டில்ஷான், விஷான் ரந்திக்க, எல்.பி.பி.எம். குமார, தனஞ்சய லக்ஷான், கவிஷ்க அஞ்சுல, துனித் வெல்லாலகே, நிமேஷ் விமுக்தி, சுமிந்த லக்ஷான், டில்ஷான் மதுஷன்க, திலங்க உதேஷான், மிலான் ரட்நாயக்க, அசன்க மனோஜ், ப்ரவீன் ஜயவிக்ரம, கௌமால் நாணயக்கார.

யாழ்ப்பாணம்: தனஞ்சய டி சில்வா (தலைவர்), சதீர சமரவிக்ரம (உதவித் தலைவர்), நிஷான் மதுஷ்க, நவோத் பரனவித்தாரண, சுக்கித மனோஜ், கசுன் அபேரட்ன, ஜனித் லியனகே, மாதவ வர்ணபுர, அவிஷ்க தரிந்து, லஹிரு மதுஷன்க, ரவிந்து பெர்னாண்டோ, ப்ரமோத் மதுஷான், ஷிரான் பெர்னாண்டோ, கவிந்து பத்திரட்ன, ஏஷான் மாலிங்க, பினுர பெர்னாண்டோ, ஜெவ்றி வெண்டர்சே, டிலும் சதீர, சுஞ்சுல பண்டார, சஷிக்க டில்ஷான்.

கண்டி: நிரோஷன் திக்வெல்ல (தலைவர்), சாமிக்க கருணாரட்ன (உதவித் தலைவர்), பெத்தும் நிஸ்ஸன்க, லசித் குரூஸ்புள்ளே, கசுன் அதிகாரி, தனுக்க தாபரே, ஓஷத பெர்னாண்டோ, லஹிரு உதார, அஹான் விக்ரமசிங்க, ரவீன் யசாஸ், சஹான் ஆராச்சிகே, லஹிரு குமார, அம்ஷி டி சில்வா, நிம்சர அத்தரகல்ல, மதீஷ பத்திரண, நிப்புன் ரன்சிக்க, லசித் எம்புல்தெனிய, அஷேன் டெனியல், வனுஜ சஹான், சச்சித்ர பெரேரா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31