நவீன தலைநகரங்களான கொழும்பு மற்றும் மற்றைய பிரதேசங்களில் அடுக்குமனைக்குடியிருப்புக்கள் அதிகரிக்கும் அதேவேளையில், தாங்கள் வீடு என அழைக்க எதிர்பார்க்கும் உடமையின் தரம் மற்றும் பணத்தின் பெறுமதி தொடர்பாக பகுத்தரிய வீட்டு உரிமையாளர்கள் ஆரம்பித்து வருகின்றனர்.

ஆகையினால் நவீன வீட்டு உரிமையாளர்களது வளர்ந்துவரும் தேவைகள் மற்றும் வசதிகளிற்கமைவான தயாரிப்பை வழங்கும்பொருட்டு ஒருபடி மேல் சென்று தயாரிப்பில் ஈடுபடுதல் ரியல் எஸ்டேட் நிறுவனங்களிற்கு மிக முக்கியமானதாக காணப்படுகின்றது. ரியல் எஸ்டேட் சந்தையில், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் அதிகமாக காணப்படுகின்றமையினால், மற்றைய நிறுவனங்களிலும் பார்க்க ஒருபடி முன்னிற்பதை தக்க வைத்தல் தொடர்ச்சியான போராட்டமாகவே காணப்படுகின்றது.

இன்வோக் (பிரைவேட்) நிறுவனமானது, இது குறித்த அதீத ஆர்வமுடைய குழுவாகவும், கட்டிட அபிவிருத்தியில் அனுபவம் மற்றும் திறமையானதாகவும், தங்களுடைய புதுமையான வடிவமைப்பு மற்றும் சந்தைப்படுத்தலிற்கு சிறப்பு தேர்ச்சி பெற்றவர்களாகவும் தொழிற்துறையில் விளைவு சார்ந்த துறை திறன்மிக்கதாகவும் காணப்படுகின்றது. இந்நிறுவனத்தின் ஆரம்பம் முதல் சிறந்த மற்றும் தற்கால வாழ்க்கை நடைமுறை வீடுகளை இலங்கை சந்தைக்கு வழங்குவதே இதனது எதிர்பார்ப்பாக காணப்படுகின்றது. செயலாக்கம் மற்றும் கருத்து மேம்பாடு தொடக்கம் தயாரிப்பின் சந்கைப்படுத்தல் மற்றும் விற்பனை வரை பொருத்தமான தீர்வுகளை வழங்குவதனால், இந்நிறுவனத்தின் செயற்றிட்டங்கள் நகரத்தின் சின்னங்களாக பிரபல்யமாகியுள்ளன.

இன்வோக்கானது உருவாக்குநர்களது செயற்றிட்டங்களின் தயாரிப்பு, விலை, இடத்தேர்வு, சந்தைப்படுத்தல் உத்திகள் என்பன அவர்களுடைய குறிப்பிட்ட இலக்கு சந்தையுடன் இசைந்துள்ளன என்பவற்றை உறுதிசெய்யும் முகமாக அவர்களது செயற்றிட்ட கருத்துருவாக்கத்தின் ஆரம்ப கட்டங்களிலிருந்து அவர்களுடன் பணியாற்றுவதன் மூலம் இடர்பாடுகளை தணிக்கும் அதேவேளையில் பயன்நிறைவை அதிகரிக்குமுகமாக உருவாக்குநர்களை வலுப்படுத்துகின்றது. இந்நிறுவனமானது, இட அமைவை ஆராய்தல், ஆகுமை ஆய்வுகளை மேற்கொள்ளுதல், இலக்கு சந்தைசார் அடுக்குமனைக்குடியிருப்பு வடிவமைப்புக்கள், தர வளர்ச்சி உத்திகள், பயிற்சிகள், 3டி படங்கள் மேலோட்டப்பார்வைகள், முக்கிய திருப்பல் சந்தைப்படுத்தல், விற்பனை தீர்வுகள், தேவையான சட்ட நடைமுறைகளை ஒருங்கிணைத்தல் மற்றும் வசதிவழங்குதல், பின்தொடரல்கள் மற்றும் நிதி சேகரிப்பு மற்றும் வாடிக்கையாளர் உறவு முகாமைத்துவம் என்பனவிற்கு முழுமையான தொழிற்துறை சேவைகளை வழங்குகின்றது. 

இன்வோக் நிறுவனமானது ஸிங்நேசர் ட்வெல்வ், ஸிங்நேசர் ஸெவன் மற்றும் அவெனியு 9 போன்ற திட்டங்களை தனது போர்ட்போலியாவில் உள்ளடக்குகின்றது. ஸிங்நேசர் ட்வெல்வ் செயற்றிட்டமானது, வாடிக்கையாளர் குழுமத்திற்கு அதனது தரத்தின் திறமை அடிப்படையில் விற்பனை செய்யப்பட்ட ஒரு முன்னோடி திட்டமாகும். இச்செயற்றிட்டமானது வாடிக்கையாளர்களது தனித்தன்மைச்சூழல் உருவாக்கம் மற்றும் அதனது வசதிகள் அடிப்படையிலேயே முழுமையாக விற்கப்பட்டது. இச்செயற்றிட்டற்களானது இதனது விற்பனைக்கு எளிதாக வழியமைத்துள்ள ஒவ்வொரு அடுக்குமனை குடியிருப்பிற்கும் தனி சூரிய மின்சார வசதியுடன் கூடிய பொதுவான பகுதியில் ஒவ்வொரு இரட்டை உயர கார் பார்க்கிங்கிற்கும் இலத்திரனியல் கார் சார்ஐpங் போர்ட்டுடன் கூடிய முழு வசதிகளையும் உடைய nஐர்மன் - மேட் ஹெக்கர் பொருளறையை உள்ளடக்குகின்றன. 

பட்டியலுள்ள செயற்றிட்டமாக கொழும்பு 7ல் அமைந்துள்ள 2 பில்லியன் ரூபாய் பெறுமதிக்கும் மேற்பட்ட முதலீட்டு எதிர்பார்ப்புடைய அடுக்குமாடி குடியிருப்பு  அடங்குகின்றது. ராஐகிரிய பிரதேசத்தில் 500 அலகுகளை உள்ளடக்கிய உருவக திட்டத்தை புகழ்பெற்ற வெளிநாட்டு உருவாக்குநருடன் இணைந்து  உருவாக்குமுகமாக கலந்துரையாடல்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. 

இந்நாட்டில் பல ரியல் எஸ்டேட் மற்றும் விருந்தோம்பல் தரங்களை உருவாக்;கிய ஓர் அனுபவம் வாய்ந்த கட்டிட நிபுணர் மற்றும் நுணுக்கவாதியான ஹ{ஸைக் இஸ்மெத், இலங்கையில் ரியல் எஸ்டேட் துறையில் 10 வருட அனுபவத்தையும் முன்னோடி ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் செயற்பட்டுள்ள ஐPவன் அமரசிங்கம், ரியல் எஸ்டேட் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனையில் 5 வருட அனுபவத்தையும் புகழ்பெற்ற சொத்து அபிவிருத்தி நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியுமான ரிகாஸ் இம்ரியாஸ் அவர்களுமே இன்வோக் நிறுவனத்தின் முதுகெலும்பாக காணப்படுகின்றனர். இந்நிறுவனமானது, பெரும்பான்மையாக மத்திய கிழக்கு நாடுகளிலும் மற்றும் அமெரிக்காவிலும் 30 வருடங்களிற்கும் மேலான அனுபவம் பெற்ற, வடிவமைப்பு மற்றும் பொறியியல் தலைவரை தனது நிறுவனத்தில் இணைத்துக்கொள்வதற்கான பேச்சு வார்த்தைகளில் தற்போது ஈடுபட்டு வருகின்றது.

இன்வோக் நிறுவனத்தின் தற்போதைய செயற்றிட்டங்கள் குறித்த மேலதிக தகவல்களை பெற 0112 076776 ற்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொள்க அல்லது இன்வோக் நிறுவனத்தின் இணையத்தளமான www.invoke.lk  வருகை தாருங்கள்.