22022 பீபா விருது பரிந்துரைக்கப்பட்டவர்கள் பட்டியல்‍ வெளியீடு: ரசிகர்களும் வாக்களிக்கலாம்

Published By: Sethu

16 Jan, 2023 | 03:14 PM
image

சர்­வ­தேச கால்­பந்­தாட்டச் சம்­மே­ள­னத்தின் (பீபா) 2022 ஆம் ஆண்­டுக்­கான,  உலகின் மிகச் சிறந்த வீரர், மிகச் சிறந்த வீராங்க‍னை,  பயிற்­று­நர்கள், மற்றும் ரசி­க­ருக்­கான விரு­து­க­ளுக்கு பரிந்­து­ரைப்­பட்­ட­வர்­களின் பட்­டி­யலை பீபா வெளி­யிட்­டுள்­ளது. ரசி­கர்­களும் இதற்­காக தமது வாக்­கு­களை அளிக்­கலாம்.

 மிகச் சிறந்த வீரர், மிகச் சிறந்த வீராங்­கனை, மிகச் சிறந்த ஆண், பெண் கோல் காப்­பா­ளர்கள், பயிற்­று­நர்கள், வரு­டத்தில் மிக அழ­கான கோல் புகுத்­தி­ய­மைக்­கான புஸ்காஸ் விருதுக்குரியவர், மிகச் சிறந்த ரசிகர் ஆகி­யோ­ருக்­கான விரு­து­களும் வழங்­கப்­ப­ட­வுள்­ளன.

மிகச் சிறந்த வீ‍ரருக்­கான பட்­டி­யலில் ஆர்­ஜென்­டீ­னாவின் லயனல் மெஸி, பிரான்ஸின் கிலியன் எம்­பாப்பே, பிரே­ஸிலின் நெய்மார், மொரோக்­கோவின் அச்ரப் ஹக்­கீமி ஆகி­யோரும் இடம்­பெற்­றுள்­ளனர்.  கடந்த இரு வரு­டங்­களில் இவ்­வி­ருதை வென்ற போலந்து வீரர் ரொபர்ட் லேவன்­டோவ்ஸ்கி, கடந்த வருடம் பெலோன் டி'ஓர் விருதை வென்ற பிரெஞ்சு வீரர் கரீம் பென்­ஸெ­மாவும் இப்­பட்­டி­யலில் இடம்­பெற்­றுள்ளனர்.

சிறந்த வீராங்­கனை விரு­துக்­கான பரிந்­துரைப் பட்­டி­யலில், 2021 ஆம் ஆண்டு பீபா சிறந்த வீராங்­கனை விருது, 2021, 2022 ஆம் ஆண்­டு­களின் மகளிர் பெலோன் டி'ஓர் விரு­து­களை வென்ற ஸ்பானிய வீராங்­கனை அலெக்­ஸியா புட்­டேலெஸ், கடந்த வருடம் மகளிர் யூரோ கிண்­ணத்தை வென்ற இங்­கி­லாந்து அணியின்  தலைவி லியா வில்­லி­யம்சன், அச்­சுற்­றுப்­போட்­டியில் அதிக கோல்­களை (6) புகுத்­திய வீராங்­க­னை­க­ளான இங்­கி­லாந்தின் பெத் மீட், ஜேர்­ம­னியின் அலெக்­ஸாண்ட்ரா பொப் ஆகி­யோ­ரும் இடம்­பெற்­றுள்­ளனர்.

வரு­டத்தில் மிக அழ­கான கோல் புகுத்­தி­ய­மைக்­கான புஸ்காஸ் விரு­துக்­கான பரிந்­து­ரைப்­பட்­டி­யலில்  எம்­பாப்பே, பிரே­ஸிலின் ரிச்­சார்­லிசன், மரியோ பலோ­டெலி ஆகி­யோரும் இடம்­பெற்­றுள்­ளனர்.

ரசி­கர்கள், தேசிய கால்­பந்­தாட்ட அணித்­த­லை­வர்கள், பயிற்­று­நர்கள், தெரி­வு­செய்­யப்­பட்ட விசேட ஊட­க­வி­ய­லா­ளர்கள் ஆகி­யோரின் வாக்­குகள் மூலம் வெற்­றி­யா­ளர்கள் தெரிவு செய்­யப்­ப­டுவர்.

உலகம் முழு­வதும் உள்ள ரசி­கர்கள்  பீபாவின் FIFA.com இணை­யத்­த­ளத்தில் பெப்­ர­வரி 3ஆம் திகதி நள்­ளி­ரவு வரை வாக்­கு­களை அளிக்­கலாம் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

வெற்­றி­யா­ளர்கள் விபரம் பெப்­ர­வரி மாதம் அறி­விக்­கப்­படும்.

மிகச் சிறந்த ரசிகர் விரு­துக்­கான பரிந்­து­ரைப்­பட்­டி­யலில், சவூதி அரே­பி­யா­வி­லி­ருந்து 1,600 கிலோ­மீற்றர் தூரம் கால்­ந­டை­யாக பயணம் செய்து உலகக் கிண்ணப் போட்­டி­களைப் பார்­வை­யிட்ட அப்­துல்லா அல் சல்மி, போட்­டியின் பின்னர் அரங்கை சுத்­தப்­ப­டுத்­திய ஜப்­பா­னிய ரசி­கர்கள், பெரும் எண்­ணிக்­கையில் திரண்­டு­வந்து தமது அணி வெல்­வ­தற்கு உற்­சா­க­மூட்­டி­ய­துடன், அவ்­வ­ணி­யினர் நாடு திரும்­பிய பின்னர் மில்­லியன் கணக்கில் திரண்டு வர­வேற்­ப­ளித்த ஆர்­ஜென்­டீன ரசி­கர்கள், 'சிறந்த ரசிகர்' விரு­துக்கு பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளனர்.  

சிறந்த வீராங்­க­னைக்­கான பரிந்­துரைப் பட்­டியல்: 

அய்­டனா பொன்­மாட்டி (ஸ்பெய்ன்), டேபினா பிரேஸில், ஜெஸி பிளேமிங் (கனடா), சாம் கேர் (அவுஸ்­தி­ரே­லியா), பெத் மீட் (இங்­கி­லாந்து), விவியன் மெய்­டேமா (நெதர்­லாந்து), அலெக்ஸ் மோர்கன், லேனா ஒபேர்டோர்வ் (ஜேர்­மனி), அலெக்­ஸாண்ட்ரா பொப் (ஜேர்­மனி), அலெக்ஸா புட்­டேலஸ் (ஸ்பெய்ன்), வென்டி ரெனார்ட் (ஸ்பெய்ன்), கியரா வோல்ஸ் (இங்­கி­லாந்து), லியா வில்­லி­யம்சன் (இங்­கி­லாந்து).

சிறந்த வீர­ருக்­கான பரிந்­துரைப் பட்­டியல்:

ஜூலியன் அல்­வாரெஸ் (ஆர்­ஜென்­டீனா), ஜூட் பெல்­லிங்ஹாம் (இங்­கி­லாந்து), கரீம் பென்­ஸெமா (பிரான்ஸ்), கெவின் டி புரூய்ன் (பெல்ஜியம்);, ஏர்லிங் ஹாலெட் (நோர்வே), அச்ரப் ஹக்கீமி (மொரோக்கோ), ரொபர்ட் லெவான்டோஸ்கி (போலந்து), சாஜியோ மனே (செனகல்), கிலியன் எம்பாப்பே (பிரான்ஸ்), லயனல் மெஸி (ஆர்ஜென்டீனா), லூக்கா மோத்ரிச் (குரோஷியா), நெய்மார் (பிரேஸில்), மொஹம்மத் சலேஹ் (எகிப்து),  வினிசியஸ் ஜூனியர் (பிரேஸில்).

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22