விடத்தல் தீவு கிராமத்தின் வரவேற்பு வளைவு திறப்பு

By Nanthini

16 Jan, 2023 | 02:55 PM
image

மூகங்களின் ஒற்றுமைக்கு உதாரணமாக திகழும் விடத்தல் தீவு கிராமத்துக்கான வரலாற்று சிறப்பு வாய்ந்த வரவேற்பு வளைவு நேற்று (ஜன. 15) ஞாயிற்றுக்கிழமை மாலை வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டுள்ளது.

மன்னார் - யாழ்ப்பாணம் பிரதான வீதி விடத்தல் தீவு கிராமத்துக்குச் செல்லும் பிரதான  நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள விடத்தல் தீவு கிராமத்துக்கான உள்நுழைவு வரவேற்பு வளைவே இவ்வாறு திறந்துவைக்கப்பட்டுள்ளது.

விடத்தல் தீவு கிராமத்தின் தனித்துவமான சிறப்புகளை மெருகேற்றும் வகையில் புலம்பெயர்ந்து வாழும் விடத்தல் தீவை  சேர்ந்தோரின் நிதிப் பங்களிப்பின் ஊடாகவும், விடத்தல் தீவு புதிய அபிவிருத்தி அமைப்பின் நெறிப்படுத்தலின் ஊடாகவும் இந்த வரவேற்பு வளைவு அமைக்கப்பட்டுள்ளது.

இதன் திறப்புவிழாவில் முதன்மை விருந்தினராக பொறியியலாளரும், மன்னார் தொழில்நுட்ப கல்லூரியின் விரிவுரையாளருமான சூசைப்பிள்ளை விமலேஸ்வரன் கலந்துகொண்டதோடு, மதத் தலைவர்கள் உள்ளிட்ட பிரதானிகளும் பங்கேற்றனர்.

ஒன்றாக எழுந்து நின்று ஒற்றுமைக்கு பலம் சேர்க்குமிடத்து தீவின் மானிடம் மாண்புறும் என்ற வகையில் இவ்வைபவம் அமைந்திருந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பதுளை கருவேற்காடுபதி ஶ்ரீ கருமாரியம்மன் தேவஸ்தான...

2023-02-08 16:50:46
news-image

மக்கள் வங்கி குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கி...

2023-02-08 12:05:57
news-image

விஷ்வ கலா அபிமாணி 2023 விருது

2023-02-08 12:06:14
news-image

ரின்ஸாவுக்கு 'விஷ்வ கலா அபிமானி' விருது  

2023-02-08 12:07:11
news-image

கராத்தே கலை - அங்கீகாரத்திற்கான வழிமுறை...

2023-02-08 12:07:50
news-image

கண்டியில் சுற்றுலாத்துறையினருக்கு சைக்கிள் சவாரி ஊக்குவிப்பு

2023-02-07 14:43:50
news-image

LMSV, 'Rotary Honda Purudu Championship'சிறுவர்களின்...

2023-02-07 12:17:22
news-image

அட்டன் ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலய தேர்பவனி

2023-02-07 11:28:05
news-image

'ஆர்ட் ஒப் ஸ்ரீலங்கா' ஓவியக் கண்காட்சி

2023-02-06 14:34:16
news-image

மணிமேகலை பிரசுரத்தின் 32 நூல்களின் அறிமுக...

2023-02-06 13:08:25
news-image

சந்தா வாங்காத சங்கம் - சிவி...

2023-02-06 12:56:10
news-image

நல்லூர் கந்தன் ஆலய தைப்பூச திருவிழா

2023-02-06 11:44:58